கோலமாவு கோகிலா, டாக்டர் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார், தற்போது  விஜய்யை வைத்து பீஸ்ட் படத்தை இயக்கி முடித்துள்ளார். அதனை அடுத்து, நடிகர் ரஜினிகாந்தின் 169-வது படம் தொடர்பான தகவல்கள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வந்த நிலையில்,  ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு, நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் என்பது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. ரஜினி - நெல்சன் - அனிருத் கூட்டணியில் அமையும் இத்திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.


இந்நிலையில், இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக யார் நடிக்க இருக்கிறார் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். ரஜினியின் கடைசி இரண்டு படங்களான பேட்ட, அண்ணாத்தையில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தை அடுத்து, அடுத்த படத்திற்கு ஐஸ்வர்யா ராய் நாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட இருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. கடைசியாக, ரஜினி - ஐஸ்வர்யா ராய் கூட்டணியில் எந்திரன் படம் வெளியானதை அடுத்து இரண்டாவது முறையாக இருவரும் ஜோடி சேர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 




மேலும் படிக்க: குக் வித் கோமாளி சீசன் 3யை விட்டு வெளியேறிய முதல் பிரபலம்.! சோகத்தில் ரசிகர்கள்!




எந்திரன் முதல் பாகம் ஹிட்டானதை அடுத்து, இரண்டவது பாகம் வெளியானது. ஏற்கனவே ரஜினி - ஐஸ்வர்யா காம்போ ஹிட்டானதால், நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த ஜோடியை திரையில் காட்ட படக்குழு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 



ரஜினியின் அடுத்தப்படம் என்பதை பொறுத்தவரை, நீண்ட இடைவெளிக்கு பிறகு 2019-ம் ஆண்டு வெளியான ‘பேட்ட’ அவரது காமெடி நடிப்பிற்கு ஏதுவான காட்சிகளை கொண்டிருந்தது. அதனை அடுத்து, தர்பார், அண்ணாத்த படங்களில் செண்டிமெண்ட் அதிகமாக இருந்ததால் தில்லு முல்லு, மன்னன், முத்து, சந்திரமுகி போன்ற காமெடிக்கு முக்கியத்துவம் அளித்து எடுக்கப்படும் திரைப்படத்தில் ரஜினியைப் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் இருக்கின்றனர். ரஜினி 169 படத்தை நெல்சன் இயக்க இருப்பதால், இப்படத்தில் கண்டிப்பாக நெல்சனின் ப்ளாக் காமெடி ட்ராக்கும், ரஜினியின் காமெடி ஹியூமரும் ஒத்துப்போகும் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண