1.ஒரு சுடர் இரு சுடர் ஒளிச் சுடர் மணிச் சுடர் முத்துச் சுடர் ஆடுதடி...
‛‛தோகையும் தோகையும் தேகம் வாடுதுதென்றலும் தென்றலும் ராகம் பாடுதுபொன் மாலை தோரும் பூந்தீபம் ஏற்றும்சிங்காரம் கூடும் நல யோகம் வேண்டும்
தீபம் ஏற்றினால் மாலை மாற்றினால்என் இதயம் முழுதும் வெளிச்சம் பரவும்...’’
என அழகான பாடல். இசைஞானி இசையில் மனோ, ஜானகி பாடிய பாடல். கேட்க ரம்யம்.
2.இவள் யாரோ வான் விட்டு மண் வந்து நீந்தும் நிலவோ...
‛‛காதல் வாழ்வு கானல் என்று நேற்று பேசினேன்காதலே தெய்வீகம் என்று இன்று போற்றினேன்காலை மாலை உன்னை எண்ணி உள்ளம் வாடினேன்ஆசைகள் கை கூடும் இந்த நாளை வாழ்த்தினேன்கண்ணே பசும்பொண்ணே வந்தேன் உந்தன் பின்னேகண்ணா மணிவண்ணா உன் பேர் தினம் சொன்னேன்உனை கண்டேன் கனிந்தேன்...’’
வாலி வரிகளில் இசைஞானி இசையில் ஜானகி பாடிய பாடல்... கேட்க கேட்க இனிமை தரும்!
3.அம்மன் கோயில் எல்லாமே.. எந்தன் அம்மா உந்தன் கோயிலம்மா!
‛‛பாடங்கள் படித்தால் பாடத்தில் கவனம்பாடிடும் வேளையில் பாடலில் கவனம்பாவையை கண்டால் பருவத்தில் கவனம்பார்க்கின்ற வேளையில் மகன் மணம் சிதறும்அவன் மனமோ அது எங்கே சென்றாலும்இவள் மனமோ அது பின்னாலே போகும்என்றென்றும் அவள் எண்ணங்கள்நலமாக நாம் வாழ நல்வாழ்த்து கூறும்...’’
வாலி வரிகளில் இசைஞானி இசையில் அருண்மொழி பாடிய அட்டகாசமான அம்மா செண்டிமென்ட் பாடல். குரலில் வளம் சேர்த்திருப்பார் அருண்மொழி!
4.கொட்டுங்க கொட்டுங்க கொட்டுங்கட... காதலுக்கு வாழ்த்துச் சொல்லி பாடுங்கடி!
‛‛ஆண் கொற்றாமரை புலம்பிடும் இதழேசிற்றாடை அதில் சிணுங்கிடும் தனியேபடித்தவர் முதல் பாமரர் வரைவிரும்பிடும் சுவை காதலேபெண் சொல்லால் ஓடி வில்லால் ஓடும் விழி வாசல்எல்லா நாளும் உன்னால் தானே எதிர் நீச்சல்ஆண் காமன் தேரில் காதல் போரில் இறங்கும் நேரமேவெற்றி தோல்வி சொல்வார் யாரோரெண்டும் இன்பமே ஹோ ஹோ...’’
இது போன்ற அருமையான பாடல்களை நாம் இதற்கு முன் கேட்டிருப்போம். ஆனால் அவை ராஜாவின் பார்வையிலே படத்தில் வரும் பாடல்கள் என பலருக்கு தெரிந்திருக்காது. ஏன்... விஜய் ரசிகர்களுக்கே தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அதிகமான பாடல்கள் பொதுவெளியில் அதிகம் உலா வந்திருக்கும். நீங்கள் விபரம் தெரியாமல் கேட்ட இந்த பாடல்களை இனி அடையாளத்துடன் கேளுங்கள். இசைஞானி இளையராஜாவின் இன்னிசை எப்போதும் மயக்கம் தரும். நாட்டுப்புற மெட்டை காதல் பாட்டாய் தந்திருப்பார். விஜய் ஹிட்ஸில் தவற விட்ட பாடல்களில் இவை இருக்கலாம். ஆட் செய்து கொள்ளுங்கள்.