விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மாபெரும் வரவேற்பை பெற்ற தொடர் ராஜா ராணி. இந்த சீரியலின் முதல் சீசனில் இருந்த கதைக்கு முற்றிலும் மாறாக இரண்டாவது சீசன் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வருகிறது.


இந்தக் காலத்தில் அனைவரும் படிக்க வேண்டும், பெரிய பொறுப்புகளுக்கு உயர வேண்டும். குறிப்பாக பெண்கள் அனைவரும் படித்து வீட்டையும், நாட்டையும் ஆள வேண்டும் என்று கூறுவார்கள். ஆனால், இந்த கோட்பாட்டிற்கு எதிராக முற்றிலும் முரண்பாடாக ராஜா ராணி இரண்டாம் பாகத்தில் நாயகனின் தாய் சிவகாமி இருக்கிறார்.




தனது இரண்டு மகன்களும் படிக்காததால் அவர்களுக்கு படிக்காத பெண்களையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று சிவகாமி ஆசைப்பட்டது போனது நடக்காமல் போன நிலையில், தற்போது தனது இரண்டாவது மகனின் மனைவி மேற்படிப்பு படிக்க முயற்சிப்பதை மிக கடுமையாக எதிர்ப்பது போல புது ப்ரோமோவில் காட்டப்பட்டுள்ளது.


இதைப் பொறுக்க முடியாத சரவணன் அம்மா இந்த காலத்துல எல்லா பொண்ணுங்களும் படிக்குறாங்க, வேலைக்கு போறாங்க.. இதெல்லாம் சகஜம் என்று கூறுகிறார். ஆனாலும், அதைப் புரிந்து கொள்ளாத சிவகாமி தனது மகனிடம் தான் சுயநலவாதிதான் என்றும், யார் என்ன நினைத்தாலும் பரவாயில்லை என்று கூறுகிறார்.




அதற்கு சரவணன் நம்ம வீட்ல ஒரு பொண்ணு இருக்கு.. அந்த பொண்ணும் படிச்சுட்டு வேலைக்கு போனா நமக்குதானே சந்தோஷம் என்று கூறுகிறார். ஆனால், அதை  ஏற்காத சரவணனின் தாயார் சிவகாமி, எனது பொண்ணே திருமணத்திற்கு பிறகு  கணவனுடன் வாழ வேண்டும் என்பதுதான் எனது ஆசை.. எனக்கு அதுதான் நடக்கனும் என்று கூறுகிறார்.  இத்துடன் இந்த ப்ரோமோ நிறைவடைகிறது.  


பெண்களின் கல்விக்கு எதிராக முரண்பாடாக இருக்கும் சிவகாமியை திட்டிக்கொண்டேயும், அவர்களது குடும்பத்திற்கு எதிராக சூழ்ச்சி செய்யும் அர்ச்சனாவையும் பலரும் திட்டிக்கொண்டேதான்  இந்த ப்ரோமோவை ரசிக்கின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண