மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான போட்டி இன்று நடைபெற்றது. அந்தப் போட்டியில் பாகிஸ்தான் அணியின் இன்னிங்ஸின் போது கேப்டன் பிஸ்மா மாரூஃப் தன்னுடைய முதல் அரை சதத்தை கடந்து அசத்தினார். அப்போது அவர் தன்னுடைய குழந்தையை காட்டி ஒரு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார்.
அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலானது. இதைத் தொடர்ந்து பலரும் இந்த வீடியோ பதவிட்டு தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வந்தனர். இந்நிலையில் இது தொடர்பாக பிஸ்மா மாரூஃப் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “மகளிர் தினத்தன்று வெற்றி பெற்று இருந்தால் நன்றாக இருந்திருக்கும். உலகத்திலுள்ள இளம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு நான் சொல்வது ஒன்று தான். நீங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவர்கள். ஆகவே எது நடந்தாலும் நீங்கள் உங்களுடைய கனவை துறத்துங்கள். எனக்கும் என்னுடைய மகள் ஃபாத்திமாவிற்கும் நீங்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி” எனப் பதிவிட்டுள்ளார்.
பாகிஸ்தான் மகளிர் அணியின் கேப்டன் பிஸ்மா மாரூஃபிற்கு 6 மாதங்களுக்கு முன்பாக குழந்தை பிறந்தது. அவருடைய குழந்தப்பேறுக்கு பிறகு பாகிஸ்தான் அணியின் கொள்கையின் படி அவர் தன்னுடைய குழந்தை மற்றும் ஒரு நபருடம் தொடர்களில் பங்கேற்கலாம் என்று உள்ளது. ஆகவே அதை பயன்படுத்தி நியூசிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் இவர் தன்னுடைய குழந்தை மற்றும் தாய் உடன் பங்கேற்றுள்ளார்.
முன்னதாக இந்தியா-பாகிஸ்தான் மகளிர் அணிகளுக்கு இடையேயான போட்டியில் பிஸ்மா மாரூஃபின் குழந்தையுடன் இந்திய அணியினர் இருந்த படம் வேகமாக வைரலானது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்