காலத்திற்கு ஏற்ப இப்போது திருமணத்தை மீறிய உறவுகள் பற்றிய செய்திகளும் அதிகரித்த வண்ணம் இருக்கிறது. திருமணமாகி பல ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த நிலையிலும் கூட மனைவியை பிரிந்து வேறொரு திருமணமும் செய்து கொள்கிறார்கள் சிலர். அதே போன்று திருமணத்தை மீறிய உறவு வைத்துக் கொள்வதும் அதிகரித்து வருகிறது. ஏற்கனவே தற்போது நடிகர் ரவி மோகன் திருமண உறவை மீறிய தொடர்பில் இருப்பதாக ஒரு தகவல் பரபரப்பை கிளப்பிய நிலையில், சமந்தா விவகாரமும் பேசுபொருளாக மாறி உள்ளது.

Continues below advertisement

அந்த வகையில் சமீப காலமாக நடிகை சமந்தா திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக தகவல் பரவி வருகிறது. ஏற்கனவே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட சமந்தா, பல வருடங்களுக்கு பிறகு அவரிடமிருந்து விவாகரத்து பெற்று பிரிந்தார். இப்போது அவர் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது.

Continues below advertisement

அதுவும், பிரபல இயக்குநர் ராஜ் நிடிமோருவுடன் உறவில் இருப்பதாக. சமந்தா மற்றும் ராஜ்  நிடிமோரு சமீபத்தில் திருப்பதி கோயிலுக்கு சென்றனர். அப்போது சமந்தா தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ட்ராலாலா மூவிங் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சுபம் என்ற படத்தை வெளியிட்டார். அந்த நிகழ்ச்சியில் ராஜ் நிடிமோருவுடன் இருக்கும் சில புகைப்படங்களையும் பகிர்ந்திருந்தார்.

அதில், ராஜின் தோளில் தலை சாய்த்து படுத்திருக்கும் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. இது தான் இப்போது பூகம்பத்தை கிளம்பியுள்ளது. இதற்கு காரணம் ராஜ் நிடிமோரு ஏற்கனவே திருமணமானவர். அதுமட்டுமின்றி அவருக்கு ஒரு மகளும் இருக்கிறார். மேலும், அவர்களுக்கு இடையில் விவாகரத்தும்  நடக்கவில்லை. இந்த சூழலில் சமந்தாவுடன் வெளிப்படையாகவே சுற்றி வருகிறார் ராஜ். 

இருவரும் லிவிங் டூகெதர் உறவில் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. சமந்தா மற்றும் ராஜ் நிடிமோரு இருவரும், தி ஃபேமிலி மேன் 2 மற்றும் சிட்டாடல் ஆகிய வெப் தொடர்களில் இணைந்து ஒன்றாக பணியாற்றி உள்ளனர் . இந்த நிலையில் தான் ராஜ் நிடிமோருவின் மனைவி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை போட்டுள்ளார். 

அதில் பார்க்க விரும்பும் முகமும் இங்கு தான் இருக்கிறது. நான் பிடிக்க விரும்பும் கையும் இங்கு தான் உள்ளது. நான் கேட்க விரும்பும் குரலும் இங்க தான் இருக்கிறது. நான் எப்போதும் உங்களைப் பற்றி தான் நினைக்கிறேன் என்று பகிர்ந்துள்ளார். இது தனது கணவரை நினைத்து தான் உருக்கமாக பதிவிட்டுள்ளார் என கூறி வருகிறார்கள்.