சென்னை மாநகரின் மிக முக்கிய பகுதியாக கிண்டி இருந்து வருகிறது. கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலை, கிண்டி மின்சார ரயில் நிலையம், கிண்டி மெட்ரோ ரயில் நிலையம் ஆகியவை எப்போதுமே பரபரப்பாக இயங்கக்கூடிய பகுதிகளாக இருந்து வருகிறது. இதனால் இந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல், ஏற்படுவது தொடர்கதை ஆகியுள்ளது. காலை மற்றும் மாலை வேலை மட்டும் இல்லாமல், எப்போதுமே இந்த இடம் போக்குவரத்து நெரிசலால் சிக்கி தவித்து வருகிறது. 

Continues below advertisement

அண்ணா சாலை, அடையாறு பகுதியில் இருந்து தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு நோக்கி செல்லும் பேருந்துகள் கிண்டி ரயில் நிலையம் அண்ணாசாலை சந்திப்பு வழியாக செல்கின்றன. மெட்ரோ பண்ணிக்காக திருப்பி விடப்பட்ட பேருந்துகள், தற்போதும் அதே வழியில் சென்று கொண்டிருக்கிறன. ரேஸ் கோர்ஸ் சாலை மிகவும் குறுகிய சாலை என்பதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 

போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு 

இந்த நிலையில் பேருந்து பயணிகள், மின்ஸ் புறநகர் மின்சார ரயில் பயணிகள் மற்றும் மெட்ரோ ரயில், நிலையங்களுக்கு செல்லும் வகையில் கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையில் புதிதாக நடை மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. அதேபோன்று பேருந்து நிலையம் சாலை, 100 அடி அகலமாக மாற்றவும் மாநகராட்சி நடவடிக்கையில் இறங்கியுள்ளது. 

Continues below advertisement

 20.75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு 

மாநில கட்டமைப்பு நிதி மற்றும் காஞ்சிபுரம் மாநகராட்சி நிதியிலிருந்து 20.75 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கிண்டி ரேஸ் கோர்ஸ் சாலையை, ஒட்டி பேருந்து நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில் குறுகிய சாலை இருப்பதால் வாகன நெரிசல் அதிகரித்துள்ளது. புறநகர் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு செல்ல இந்த பகுதியை கடக்கும் பயணிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். 

எனவே, பயணிகளின் சிரமத்தை போக்க 20.75 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ரேஸ் கோர்ஸ் சாலை விரிவாக்கம் செய்து மேம்படுத்தப்படுகிறது. இதனால் விரைவில் ஆக்கிரமிப்பாகட்டும் பணிகள் நடைபெற உள்ளன. ரேஸ் கோர்ஸ் சந்திப்பில் ஏறினால் அண்ணா சாலையில் இறங்கும் வகையில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது. 

சிறப்பு அம்சங்கள் என்னென்ன ?

மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் சாய்வு தாளம் அமைக்கப்பட உள்ளது. அதே போன்று மின் தூக்கி மற்றும் கட்டிடக்கலை அலங்கார விளக்குகள் போன்ற வசதிகளும் அமைக்கப்பட உள்ளன. பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சிசிடிவி அமைக்கப்பட உள்ளன. குடிநீர், கழிவுநீர் குழாய்கள், மின்சாரம், தொலைத்தொடர்பு கேபிள்கள் செல்ல தனி கட்டமைப்பும் வசதிகள் செய்யப்பட உள்ளன. 

இதேபோன்று சென்னையில் அமைய உள்ள இயற்கை எரிவாயு செல்லும் தனிக் குழாயும் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நடை மேம்பாலத்தின் நீளம் 300 மீட்டர் தூரத்திற்கு அமைய உள்ளது. அமைய உள்ள சாலையின் நீளம் 900 மீட்டர். சாலையின் அகலம் 100 அடியாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. மின்வாகனங்களுக்கு சார்ஜிங் மையம் மற்றும் மின் தூக்கி உள்ளிட்ட வசதிகளும் அமைய உள்ளன.