சமூக வலைதளங்களில் எப்போதும் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் மற்றும் நிழற்படங்கள் அதிக பேரின் கவனத்தை ஈர்ப்பது இயல்பான ஒன்று. ஆனால் 3 மாதங்களுக்கு முன்பாக போடப்பட்ட ஒரு வீடியோ தற்போது ட்ரெண்டாகி வருவது தான் மிகவும் ஆச்சரியமான ஒன்று. அப்படி அந்த வீடியோ திடீரென ட்ரெண்டாக காரணம் என்ன? அந்த விலங்கு வீடியோவில் என்ன சிறப்பு உள்ளது?
அமெரிக்காவின் கலிஃபோர்னியா பகுதியில் ஜே ப்ரூ என்பவர் ஒரு ஊர்வன விலங்குகள் உயிரியல் பூங்கா ஒன்றை நிர்வாகித்து வருகிறார். அவர் அவ்வப்போது அங்கு இருக்கும் வித்தியாசமான வகை ஊர்வனைகளை வைத்து வீடியோ எடுத்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் கடந்த மே மாதம் தன்னுடைய பூங்காவில் உள்ள ஒரு ரெயின்போ நிற பாம்பு ஒன்று தொடர்பாக வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோ அப்போது ஒரளவிற்கு நல்ல வியூஸ் மற்றும் லைக்ஸ் பெற்றுள்ளது. எனினும் சமீபத்தில் இந்த வீடியோவின் ஒரு பகுதியை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ரீல்ஸில் வைத்துள்ளார். அதைப் பார்த்த பலரும் அந்த பழைய வீடியோவை சென்று முழுமையாக பார்த்துள்ளனர்.
இதனால் தற்போது அந்த வீடியோவை 20 மில்லியன் பேருக்கு மேல் பார்த்து ரசித்துள்ளனர். அத்துடன் 1 மில்லியன் பேர் லைக் செய்துள்ளனர். அத்துடன் பலரும் ஆச்சரியத்துடன் இந்தப் பதிவில் தங்களது கருத்துகளை பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோவை பலரும் ரசித்து உள்ளனர். சமீபத்தில் இந்தியாவில் ஒரு சிறுவன் தன்னுடைய கோழிகளை அழைத்து செல்வதை தடுக்க முயன்ற வீடியோ மிகவும் வைரலானது. அந்த வகையில் உலகளவில் இந்த விலங்கு வீடியோ மிகவும் வைரலாக தொடங்கியுள்ளது. குறிப்பாக மூன்று மாதங்களுக்கு முன்பாக பதிவிடப்பட்ட அந்த வீடியோ தற்போது ட்ரெண்டாக அந்த இன்ஸ்டா ரீல்ஸ்தான் காரணமாக கருதப்படுகிறது. சமூக வலைதளத்தில் எப்போது எந்த வீடியோ வைரல் ஆகும் என்பதை யாராலும் கணிக்க முடியாது என்பதற்கு இந்த வீடியோவும் ஒரு உதாரணம் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க:'கரணம் தப்பினால் மரணம்' : ரயில் பாதையில் சிக்கிய நபரை மீட்ட இளைஞர் (வைரல் வீடியோ)