பொதுவாக சமூக வலைதளங்களில் எப்போது எந்த வீடியோ வைரலாகும் என்று யாராலும் கணிக்க முடியாது. ஆனால் ஆபத்தில் சிக்கியிருக்கும் நபரை மற்றொருவர் காப்பாற்றினால் அந்த வீடியோ நிச்சயம் பலரின் கவனத்தை பெரும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது மாற்றுத்திறனாளி நபர் ஒருவர் தெரியாமல் தன்னுடைய சக்கர் நாற்காலியுடன் சுரங்க ரயில் பாதையில் விழுந்துவிடுகிறார். அவரை இளைஞர் ஒருவர் சுதாரித்து கொண்டு காப்பாற்றும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. 


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள சுரங்க ரயில்வே பாதையில் மாற்றுத்திறனாளி ஒருவர் தன்னுடைய சக்கர நாற்காலியுடன் தவறி விழுந்து விடுகிறார். அங்கு ரயில் வருவதற்கு சில வினாடிகள்தான் இருந்தது. அப்போது அங்கு இருந்த இளைஞர் ஒருவர் உடனடியாக தண்டவாளத்தில் குதித்து அந்த நபரையும் அவருடைய நாற்காலியையும் விரைந்து மீட்டார். அவர் மீட்ட அடுத்த சில நொடிகளில் அந்த தண்டவளத்தில் ரயில் வந்தது. கரணம் தப்பினால் மரணம் என்ற சூழலில் தன்னுடைய உயிரை பற்று நினைக்காமல் அந்த இளைஞர் மாற்றுத்திறனாளியை காப்பாற்றியது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 






இந்த வீடியோவை ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவை பார்த்து பலரும் அந்த இளைஞரை பாராட்டி கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதில் சில 


 






 






 






 


இவ்வாறு பலரும் அந்த இளைஞரின் செயலை வியந்து பார்த்து பாராட்டி வருகின்றனர். 


மேலும் படிக்க: ”மெலிண்டா மிகச்சிறந்த நபர்” - திருமணம், கூடா நட்பு, பாலியல் குற்றச்சாட்டு: மனம் திறந்த பில்கேட்ஸ்..