நடிகை திஷா பர்மர் மற்றும் அவரது கணவரும் பாடகருமான ராகுல் வைத்யா ஆகியோர் தங்களது திருமணமான ஒரு வருடத்தை மிகவும் அபிமான படங்களுடன் கொண்டாடி வருகின்றனர். இந்த ஜோடி ஜூலை 16 அன்று தங்கள் முதல் திருமண ஆண்டு விழாவை சமூக ஊடகங்களில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டனர். லண்டன், யுனைடெட் கிங்டம் முழுவதும் பயணம் செய்யும் போது அவர்கள் ஒருவருக்கு ஒருவர் முத்தம் கொடுத்துக் கொண்டு மற்றும் சில கிரேசியான தருணங்களைப் பகிர்ந்து கொண்டனர். ராகுல் தனது மனைவிக்காக ஒரு இதயப்பூர்வமான குறிப்பை எழுதியுள்ளார். மேலும், அவர் ‘அடுத்த ஏழு ஜென்மத்துக்கும் நீ மட்டுமே வேண்டும்' என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.
சனிக்கிழமையன்று, ராகுல் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் திஷா பர்மருடன் தனது முதல் திருமண நாள் குறித்துப் பகிர்ந்துகொண்டார். அதில் ராகுல் தனது மனைவி திஷாவுடன் செல்ஃபிகளை பகிர்ந்துகொண்டார். அதில் இருவரும் கேமராவைப் பார்த்து புன்னகைப்பதும், முத்தத்தைப் பகிர்ந்து கொள்வதும், திஷா விளையாட்டாக ராகுலின் கன்னத்தைக் கடிப்பதும் இடம்பெற்றுள்ளது. அந்த படங்களைப் பகிர்ந்துகொண்ட ராகுல், "ஹேப்பி முதலாம் ஆண்டு திருமண வாழ்த்துகள் என் அன்பே... 1 வருடம் கடந்துவிட்டது, அதுவும் மிக வேகமாக... உன்னை என் வாழ்க்கைத் துணையாகப் பெற்றதற்கு நான் மிகவும் பாக்கியவானாக இருக்கிறேன்! அடுத்த ஏழு ஜென்மங்களுக்கு நீ மட்டுமே வேண்டும். க்ளிஷேவாக இது ஒலிக்கலாம். உங்களுடைய உள் அழகு என்னை தினமும் பிரகாசிக்க வைக்கிறது... நான் உன்னை காதலிக்கிறேன் மனைவி! இன்னும் பல வருடங்கள் சிரிப்பு மகிழ்ச்சி மற்றும் அழகான தருணங்கள்."
ராகுல் தனது டைம்லைனில் புகைப்படங்களை பதிவிட்ட பிறகு, பல நட்சத்திரங்கள் இந்த ஜோடியை வாழ்த்தியுள்ளனர். ஸ்வேதா திவாரி எழுதுகையில், "அவ்வ்வ்வ்... ஸோ க்யூட்...ஹேப்பி ஆனிவர்சரி கய்ஸ்." என வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் மௌனி ராய், "வாழ்த்துக்கள்" என்று கருத்து தெரிவித்துள்ளார். ஜாஸ்மின் பாசின், "வாழ்த்துக்கள் நண்பர்களே" என்று கமெண்ட் செய்துள்ளார்
.
இதற்கிடையில், ராகுலும் திஷாவும் தற்போது இங்கிலாந்தில் ஒன்றாக விடுமுறையில் உள்ளனர்.