Rajini & Raguvaran Friend Sathyendra : ரகுவரனுக்கு வாய்ப்பு வாங்கி கொடுத்ததே நான் தான்...உண்மையை உடைக்கும் சத்யேந்திரா 


தமிழ் சினிமா மிஸ் செய்த ஒரு பன்முக கலைஞர் சத்யேந்திரா. சில படங்களில் முகத்தைக் காட்டியவர். ஆரம்பகாலத்தில் ரஜினி மற்றும் ரகுவரன் உள்ளிட்டவர்களுடன் நெருங்கி பழகியவர் சத்யேந்திரா.  இவர் ஒரு நேர்காணலின் போது ரஜினி பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார்.


ஆரம்பகாலத்தில் ரஜினியின் ரூம் மேட்:


"பெங்களுருவில் தான் நான் முதன்முதலில் ரஜினியை சந்தித்தேன். அப்போது தான் ரஜினி தனது முதல் படத்தில் நடித்து முடித்திருந்தார். உங்கள் முகத்தில் நல்ல கலை உள்ளது ஒருமுறை சென்னைக்கு வருமாறு அழைத்தார். ஒரு பத்து பதினைந்து நாள் அவருடன் நான் தங்கி இருந்தேன். அனைவரும் சேர்ந்து 10 காசு 15 காசு போட்டு இரண்டு மூன்று பீடி கட்டு வாங்குவோம். மிகவும் நாகரிகமாக என்னோடு பழகினார். அவருடைய வளர்ச்சியை நான் மதிக்கிறேன்பாராட்டுகிறேன். ஒரு சாதாரண நிலையில் இருந்து இன்று இப்படி ஒரு நிலையில் இருப்பதற்கு அவரது கடுமையான உழைப்பு தான் காரணம். அவரை நான் மிகவும் சிறந்த கலைஞர் என்று நான் சொல்ல மாட்டேன் ஆனால் அவர் மிக சிறந்த மனிதர். ஒரு முறை அவரை நான் 5 ஸ்டார் ஹோட்டலில் சந்தித்தேன். அன்றும் என்னை ஞாபகம் வைத்து நலம் விசாரித்து என்னை வீட்டிற்கு வருமாறு அழைத்தார்" என்றார் சத்யேந்திரா.


நடிகர்களிடம் சான்ஸ் கேட்க மாட்டேன்: 


மேலும் அவர் கூறுகையில் எனக்கென்று ஒரு தனிப்பட்ட பிலாசபி இருந்தது. எந்த நடிகரிடமும் நடிக்க சான்ஸ் கேட்டு போக கூடாது என்று. மேக் அப் ஆர்ட்டிஸ்ட், துணை இயக்குனர் என்ன மற்றவர்களின் கேட்கலாம் ஆனால் ஒரு நடிகரிடம் மற்றும் கேட்கக்கூடாது என்ற கொள்கை வைத்திருந்தேன். ஏனென்றால் அது யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆயிரம் பிரச்சனைகள் இருக்கும். நான் தொந்தரவு செய்யக்கூடாது என்று நினைத்தேன். அதற்கு பிறகு அவரை பார்க்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றார். 



ரகுவரனின் நெருங்கிய நண்பர்: 


 நடிகர் ரகுவரன் உடன் இருக்கும் நட்பு குறித்து பேசுகையில் " எங்கள் நட்பு வட்டாரத்தில் மிகவும் பணக்காரர் ரகு தான். ரகுவுடன் இணைந்து தேசிய விருது பெற்ற "கிரஹானா" எனும் கன்னட திரைப்படத்தில் தான் நான் முதன்முதலில் நடித்தேன்.  திரைப்பட இயக்குனர் ஹரிஹரன் தனக்கு அமெரிக்கா நடிகரான ராபர்ட் ரெட்போர்ட் போன்ற ஒரு நடிகர் எனக்கு வேண்டும் என்ன கேட்டார். நான் அதற்கு ரகுவரனை இயக்குனர் ஹரிஹரன் ஆபீஸ்க்கு அழைத்து சென்றேன். ரகுவரனுக்கு அந்த வாய்ப்பு கிடைத்தது. சில நாட்களிலேயே "ஏழாவது மனிதன்" திரைப்படத்தின் மெயின் ரோலிற்கு ஒப்பதம் ஆனார். நான் வாய்ப்பு வாங்கி கொடுக்கவில்லை அவரை அங்கே கொண்டு போய் சேர்த்தேன் அவ்வளவு தான்.   



சாதனையாளன் ரகுவரன் : 


ரகுவரன் இன்று இல்லை ஆனால் நான் அவரை பற்றி சொல்லியே ஆக வேண்டும். அவர் கொஞ்சம் பண நெருக்கடியில் இருந்தார் ரகுவரன். என்னுடைய ரூமிற்கு வந்து நான் இப்போது படங்கள் எதிலும் நடிக்கவில்லை. உனக்கு நிறைய பேரை தெரியும் என்னை அவர்களிடம் அறிமுக படுத்துவாயா என்று கேட்டார். "கக்கா" எனும் மலையாள படத்தில் மெயின் ரோல் வாய்ப்பு கிடைத்தது. சில காலங்களுக்கு பிறகு பிலிம் ஃபேர் விருதில் ரகுவரனை சந்தித்தேன். ரகுவரனை இன்டெர்வியூ எடுக்க வந்தவர்களிடம் என்னை காட்டி என்னை விடவும் நல்ல ஆர்ட்டிஸ்ட் இவன் எனது என்னை அறிமுக படுத்தினான் ரகுவரன். அப்படி ஒரு நெருக்கமான உறவு எங்களுக்குள் இருந்தது. ஒரு நல்ல வாழ்க்கையை வாழ்ந்த ரகுவரன் தனது 100 வயதில் என்ன சாதிக்கவேண்டுமோ அதை தன்னுடைய இறப்பிற்கு முன்னரே சாதித்துவிட்டான் என்றார் சத்யேந்திரா.