Chandramukhi 2 - Thori Bori Lyric: சந்திரமுகி 2 படத்தின் ’தோரி போரி’ பாடலின் லிரீக் வீடியோ வீடியோ வெளியாகியுள்ளது. 


சந்திரமுகி 2:


பி. வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்துள்ள சந்திரமுகி 2 படத்தின் ஒவ்வொரு அப்டேட்களை படக்குழு வெளியிட்டு வருகிறது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், ராதிகா, வடிவேலு, மகிமா, லக்‌ஷ்மி மேனன், சுபிக்‌ஷா என பலரும் நடித்திருக்கும் சந்திரமுகி 2 படம் வரும் 28ம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் ரிலீசாக உள்ளது. இந்த படத்துக்கு ஆர்.ஆர்.ஆர். படத்துக்கு ஆஸ்கர் விருது பெற்ற எம்.எம்.கீரவாணி இசை அமைத்துள்ளார். டி.ஆர். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். 


தோரி போரி பாடல்:


இந்த நிலையில் சந்திரமுகி அரண்மையில் குடும்பத்துடன் ராகவா லாரன்ஸ் இருக்கும் ‘ தோரி போரி’ பாடல் வெளியாகியுள்ளது. ” ’யாதும் இங்கே ஊரே என்றால் எல்லைக்கோடே மீளாதய்யா’, தேங்காமல் நதிபோலே ஓடு, அன்னை அவள் அன்பு முகத்தில் ஆண்டவனை கண்டிடலாமே ” வரிகள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது. பாடல் வரிகளை யுகபாரதி எழுதி இருக்க, கீரவாணி இசையில் ஹரிச்சரண் பாடியுள்ளார். படத்தின் முதல் சிங்கிளான ‘ஸ்வக்கதாஞ்சலி’ பாடல் வெளியாகி பெரிதும் ரசிக்கப்பட்டது. பாடலுக்கு ஏற்ப படத்தில் இருந்த கங்கனா ரனாவத் நடனத்திலும் அசத்தி இருப்பார். 






சந்திரமுகி 2 - மார்க் ஆண்டனி:


ஏற்கனவே சந்திரமுகி 2 வரும் 15ம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், ஷாருக்கான் நடிப்பில் வெளிவந்த ஜவான் படத்தில் திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாலும், விஷாலின் நடிப்பில் உருவாகியுள்ள மார்க் ஆண்டனி படத்தில் ரிலீசாலும் சந்திமுகி 2 படம் வரும் 28ம் தேதி ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. 


2005ம் ஆண்டு இதே வாசு இயக்கத்தில் வெளிவந்த சந்திரமுகி படத்தில் ரஜினி நடித்திருந்தார். படம் 200 நாட்களுக்கு மேல் ஓடி மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இந்த நிலையில் இரண்டாம் பாகத்தில் ரஜினிக்கு பதிலாக ராகவா லாரன்ஸ் நடித்துள்ளார். இதில் வேட்டையன் ராஜா மற்றும் சந்திரமுகியின் கதையை கூறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


மேலும் படிக்க: Leo: ”லியோவில் எந்த சீனும் கட் செய்ய மாட்டோம்” விஜய் ரசிகர்கள் படுகுஷி..!


Mark Antony: மீண்டும் வெள்ளித்திரையில் சில்க்.. ஒரு பாட்டுக்கு 1.5 கோடி.. மார்க் ஆண்டனி படத்தில் வேற என்னலாம் ஸ்பெஷல்?