கொரோனா பாதிப்பு, அதன்பிறகான உடல் சிக்கல்களுக்கு நடுவே ஒரு மியூசிக்கல் ஆல்பம் ஒன்றையும் படுவேகமாக முடித்திருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அண்மையில் நடிகரும் டான்ஸ் மாஸ்டருமான ராகவா லாரன்ஸை சந்தித்து உரையாடி உள்ளார். 

Continues below advertisement

Continues below advertisement

இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்திருந்த ஐஸ்வர்யா, ‘என் அண்ணனைச் சந்தித்தது எனக்கு ஊக்கமாக அமைந்துள்ளது. மகிழ்ச்சி. இன்னும் பல யோசனைகள் எனக்குக் கிடைத்துள்ளன எனத் தனது புகைப்படத்தில் குறிப்பிட்டுப் பகிர்ந்திருந்தார். ’

இதுகுறித்துத் கருத்து பகிர்ந்திருந்த ராகவா லாரன்ஸ், ‘எனது தங்கை ஐஸ்வர்யா வாழ்வில் அண்மையில் பல நிகழ்வுகள் நடந்துவிட்டன. அதுபற்றி கருத்துக் கூற எனக்கு விருப்பமில்லை. ஆனால் அவர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதுதான் நான் வேண்டுவது எல்லாம்’ எனக் கூறியுள்ளார். 

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அண்மையில் நடிகர் தனுஷுடனான 18 வருட மணவாழ்க்கையில் இருந்து விலக்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து இருவரும் தங்களது சமூக வலைத்தளப்பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்திருந்தனர்.