கொரோனா பெருந்தொற்று காலத்தில் நான் நடிக்க விரும்பிய பட வாய்ப்புகள் மற்ற நடிகைகளுக்கு கிடைத்தது தன்னை மன உளைச்சலில் ஆழ்த்தியதாக முன்னணி நடிகை ராதிகா ஆப்தே வருத்தத்துடன் மனம் திறந்துள்ளார். 

Continues below advertisement


ராதிகா ஆப்தே மராத்தி, தமிழ், பெங்காலி, ஆங்கில, இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துவரும் முன்னணி நடிகை. இவர் சமீபத்தில் Hauterrfly என்ற ஃபேஷன் செய்தித்தளத்திற்கு பேட்டி அளித்திருந்தார். அதில், நடிகைகள் சினிமா துறையில் எப்போதும் நிலைத்திருப்பதற்காகவும், வயதானாலும் தங்கள் அழகை மீட்டெடுக்க அறுவை சிகிச்சைகள் மேற்கொள்கிறார்கள். தங்கள் முகத்தையும், உடலையும் அழகாக மாற்றி அமைக்க பல்வேறு சிகிச்சைகளை (Cosmetic Procedures ) செய்துகொள்கின்றனர். பாடி பாசிடிவிட்டி பற்றி பேசுபவர்களும் இதைச் செய்வது அதிர்ச்சியளிப்பதாக தெரிவித்துள்ளார். 


”கொரோனா காலத்தில் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளானேன். நான் நடிக்க விரும்பிய பெரும்பால படங்களுக்கான வாய்ப்பு மற்ரவர்களுக்கு சென்றது. அவர்கள் தங்களுக்கு வயதாவதை குறைக்க பல சிகிச்சைகள் மேற்கொண்டார்கள். இந்த ஒரு காரணத்திற்காக எனக்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. ‘ என்று சினிமாவில் அழகுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தால் ஏற்படும் அழுத்தம் பற்றி கூறியுள்ளார்.


வயதாக தொடங்கிவிட்டால், எல்லாருக்கும் உடலில் பல மாற்றங்கள் நிகழும். தோல் சுருங்குவது உள்ளிட்ட பல மாற்றங்கள் நிகழும். சினிமா துறையில் இருப்பவர்களுக்கு அவர்களின் உடல்தான் மூலதனம் என்ற கருத்து நிலவுகிறது. மேலும், ஒரு பெண் இளமை காலத்தில் மட்டுமே மாடலிங், நடிப்பு உள்ளிட்டவைகளுக்கான வாய்ப்பு கிடைக்கும். 26-30 வயதிற்குள்ளாகவே நடிகைகளின் உடல் தோற்றம் கேலிக்குள்ளாகுவது, வாய்ப்புகள் கிடைக்காமல் போவது உள்ளிட்டவைகள் ஆரம்பமாகும். இதில் 30 வயதுக்கும் மேற்பட்ட நடிகைகள் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தால், அதற்கு ‘ வயதாகிவிட்டது தெரிகிறதே’ என்று பல குரல்கள் கிடைக்கும். இது ஆண், பெண் இருவருக்கும் பொதுவானது என்றாலும், பெண் என்றால் கிளியர் ஸ்கின், வெள்ளை வெளீரென் இருக்க வேண்டும் என்பது சினிமாவில் காலங்காலமாக தொடரும் அவலம் எனலாம்.


இதனால், பல நடிகைகள் தங்கள் அழகை பாதுகாக்க தொழில்நுட்ப வசதியுடன் பல்வேறு அறுவை சிகிச்சைகளை மேற்கொள்வது அதிகரித்து வருகிறது. முதுமை என்பது அழகற்றது அல்ல என்பது இங்கு யாருக்குமே புரியவில்லை. இப்படி, பலர் சினிமா துறையில் தங்களுக்கான இடத்தை தக்கவைத்து அறுவை  சிகிச்சை செய்துகொள்வது பற்றியும் ராதிகா ஆப்தே மனம் திறந்திருக்கிறார். 


இது குறித்து அவர் கூறுகையில், '`வயது கூட கூட என் துறையில் பல பிரபலங்கள் தங்களை அழகாக்க அறுவை சிகிச்சை செய்துகொள்கிறார்கள். இப்படி, தங்களுக்கு வயதாகி வருவதால்,  தங்கள் முகத்தையும் உடலையும் மாற்றி அமைக்க பல அறுவை சிகிச்சைகள் செய்துகொண்ட நண்பர்கள் பலரை எனக்குத் தெரியும். முதுமை இயற்கையின் மாற்றம் என்று சொல்பவர்கள் கூட இதுபோன்ற சிகிச்சைகளை செய்துகொள்கின்றனர்.  வயதாவதால் அழகு குறைவதாக நினைத்து கொண்டு, ஆப்ரேஷன்களை செய்துகொள்பவர்களால் என்னை சோர்வாக உணரவைக்கிறார்கள். அதை மிகவும் சவாலாகக் காண்கிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.


ராதிகா ஆப்தே தற்போது இந்தியில் தயாராகிவரும் ’விக்ரம் வேதா’ படத்தின் ஷூட்டிங்கில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.