நடிகரும்,இயக்குநருமான பார்த்திபன் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு இணையவாசிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 


தமிழ் சினிமாவில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் இயக்குநர்களில் இயக்குநர் பார்த்திபனும் ஒருவர். இவர் சமீபத்தில் எழுதி, இயக்கி, நடித்து தயாரித்த இரவின் நிழல் படம் வெளியானது. உலகிலேயே முதல், “நான் லீனியர் சிங்கிள் ஷாட்” படமாக உருவான இந்தப்படம் என்ற பெருமையோடு வெளியான இப்படத்தை பார்த்த பலரும் பார்த்திபனின் வித்தியாசமான முயற்சியை சமூக வலைத்தளங்களில் பாராட்டினர். 






இந்த படத்தில் நடிகைகள் பிரிகிடா, வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நிலையில் ஏ.ஆர்.ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஆனால் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறனோ பார்த்திபனோடு இது முதல் நான் லீனியர் சிங்கிள் ஷாட் படம் இல்லை என மல்லுக்கு நின்றார். இருவருக்குமிடையே காரசார கருத்து மோதல்கள் நிகழ்ந்தது. 






இதற்கு நடுவே ஆமீர்கான் நடிப்பில் உருவாகியுள்ள லால் சிங் சத்தா படத்தின் பிரீமியர் ஷோவில் நடிகர் பார்த்திபன் கலந்து கொண்டு படம் பார்த்தார். பின்னர் ஆமீர்கானோடு தான் எடுத்த புகைப்படத்தைப் பதிவிட்டு அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில் Lal singh Chaddha ‘பார்த்து  கண் கலங்க அமீர் கானிடம் சொன்னேன்,“ U r just spreading LOVE through this film to a society where there’s is hatred and negativity” Amazing movie.அன்பை, அர்ப்பணிப்பை,  காதலை,கடமையை கண்ணியத்தை இதை விட சிறப்பாக ஒரு படத்தில் சொல்ல முடியுமா? வெறுப்பை  பருப்பாய் கடைந்து,அதில் அருவருப்பையும் அவமதிப்பையும் தாளித்துக் கொட்டி Dal Makhani  செய்யும் சிலர் நிறைந்த இந்நாட்டிற்கு  இப்படம் அவசியம்.


தூர்தர்ஷனிலிருந்து சுதந்திர தினத்திற்கு பிரதமரின் கோரிக்கைப் பற்றி ஒரு வீடியோ அனுப்புங்கள் என கேட்க,நான் அனுப்ப தேசிய விருதுக்கா?”என்ன ஒரு கலை மதிப்பு?பிரதமரின் பெயரை உச்சரித்தாலே தேசிய விருதென்றால், ”மோடிஜீக்கு ஜே”என கோஷமிடும் கூட்டத்தில் ஒவ்வொருவருக்கும் கொடுப்பாங்களாக்கும் ஒவ்வொரு மயில் விருது என தெரிவித்துள்ளார். 






இதனைப் பார்த்த பலரும் பார்த்திபன் பாஜகவை ஆதரவு தெரிவிக்கிறாரோ என சந்தேகம் ஏற்படுவதாக தெரிவித்துள்ளனர். மேலும் சிலர் வழக்கம்போல் பார்த்திபன் பேச்சு புரியவில்லை என கருத்து தெரிவித்துள்ளனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண