சின்னத்திரையில் மிகவும் பிரபலமான ஜோடியாக இருந்தவர்கள் நடிகர் ரச்சிதா மஹாலக்ஷ்மி மற்றும் தினேஷ் ஜோடி. ரீல் ஜோடிகளாக இருந்து ரியல் ஜோடியானவர்கள். மிகவும் சந்தோஷமாக நகர்ந்த அவர்களின் திருமண வாழ்க்கையில் சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட இருவரும் பிரிந்து தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
தினேஷ் என்ட்ரி :
கடந்த பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் போட்டியாளர் ஒருவராகக் கலந்து கொண்ட ரச்சிதா வெகு சிறப்பாக விளையாடி 91 நாட்கள் வரை நீடித்தார். அவரைத் தொடர்ந்து தற்போது ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு போட்டியாளராக என்ட்ரி கொடுத்து சக போட்டியாளர்களுக்கு சரியான டஃப் கொடுத்து வருகிறார் தினேஷ்.
ரச்சிதாவுக்கு ரசிகர்கள் அட்வைஸ்:
தினேஷ் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்த நாள் முதல் பல இடங்களில் தான் ரச்சிதாவுடன் மீண்டும் இணைந்து வாழ விருப்படுவதாகவும் இந்தப் போட்டியில் வெற்றி பெற்று அதை ரச்சிதாவுக்கு பரிசளிப்பேன் எனக் கூறியுள்ளார். ரச்சிதா மற்றும் தினேஷ் இருவரின் ரசிகர்களும் அவர்கள் இருவரும் மீண்டும் இணைய வேண்டும் எனவே ஆசைப்படுவதால் ரச்சிதாவுக்கு அட்வைஸ் கொடுத்து வருகிறார்கள்.
ரச்சிதாவின் பதிலடி :
ஆனால் தினேஷ் மீது இருக்கும் கோபம் சற்றும் தணியாத ரச்சிதா அவ்வப்போது இன்ஸ்டாகிராம் மூலம் தகுந்த பதிலடியை கொடுத்து வருகிறார். அந்த வகையில் யார் வேண்டுமானாலும் அட்வைஸ் கொடுக்கலாம் ஆனால் அதை அனுபவிப்பவர்களுக்கு தான் வலி என்ன என்பது தெரியும். என்னுடைய வாழ்க்கையை பார்த்து கொள்ள எனக்கு தெரியும். அதனால் தயவு செய்து யாரும் எனக்கு அட்வைஸ் செய்ய வேண்டாம் என பளிச் பதில் அளித்துவிட்டார். மேலும் பிக் பாஸ் வீட்டில் தினேஷுக்கு எதிராக சண்டையிடும் விசித்திராவுக்கு, ரச்சிதா தன்னுடைய ஆதரவை சில நாட்களுக்கு முன்னர் தெரிவித்து இருந்தார்.
விசித்திராவை கண்டித்த கமல் :
கடந்த வாரம் விசித்திரா கேமரா முன் நின்று தினேஷ் பற்றியும் அவரின் பர்சனல் லைஃப் பற்றியும் விமர்சனம் செய்து இருந்தார். அவரின் அந்த செயல்பாடுக்கு சனிக்கிழமை எபிசோடில் கண்டனம் தெரிவித்து இருந்தார் நடிகர் கமல்ஹாசன். ஒரு கணவன் மனைவி இடையே நாட்டாமை செய்ய வேறு ஒருவருக்கு எந்த ஒரு உரிமையும் இல்லை என சரியான பதிலடி கொடுத்தார்.
ஆனால் இவ்வளவு நடந்த பிறகும் விசித்திராவால் வாயை வைத்து கொண்டு சும்மா இருக்க முடியவில்லை. தினேஷ் வேண்டுமானாலும் ஒரு நல்ல அண்ணன், தம்பி, மகனாக இருக்கலாம் ஆனால் ஒரு நல்ல கணவனாக நிச்சயமாக இருக்க முடியாது என அவர் பேசியதற்கு பலரும் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
ரச்சிதா லேட்டஸ்ட் போஸ்ட் :
அந்த வகையில் ரச்சிதா தன்னுடைய லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போஸ்டில் "உண்மை எப்போதுமே கசக்கும். அதற்காக அது உண்மை இல்லை என ஆகிவிடாது. மற்றவர்கள் ஜட்ஜ் பண்ணலாம், ஆனால் என்னுடைய வாழ்க்கையை வாழ முடியாது. என்னுடைய இந்த வாழ்க்கை போரில் நானே தனியாக போராடி கொள்கிறேன். எல்லாரும் உங்களுடைய வேலையை பாருங்க. நாங்க எங்க வேலையை பார்த்துக்கொள்கிறோம் " எனப் பகிர்ந்துள்ளார்.
மேலும் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் "துரதிர்ஷ்டவசமான ஒன்று என்னவென்றால் நாம் வாழும் இந்த உலகில் ஒருவரின் செயல்கள் கேள்வி கேட்கப்படுவதில்லை. ஆனால் அந்த செயலுக்கான ரியாக்ஷன் தான் எப்போதும் விமர்சிக்கப்படுவடுகிறது. என்ன ஒரு பரிதாபம்" எனப் பதிவிட்டுள்ளார்.
இந்நிலையில் ரச்சிதாவின் இந்தப் பதிவு விசித்திராவின் அட்வைஸூக்கு கொடுத்த பதிலா அல்லது கமல்ஹாசன் சொன்ன கருத்திற்கான பதிலா என ரசிகர்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.