நடிகர் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனத்துக்கு விக்ரம் திரைப்படம் மூலம் மாபெரும் வெற்றியை பெற்றுத் தந்த லோகேஷ் கனகராஜ் (Lokesh Kanagaraj), தற்போது அவரது மகள் ஸ்ருதி ஹாசனுடன் இணைந்து பணியாற்ற உள்ளார்.


கடந்த 2022ஆம் ஆண்டு லோகேஷ் இயக்கத்தில் வெளியான விக்ரம் படத்தின் வெற்றிக்குப் பிறகு புத்தாக்கம் பெற்ற ராஜ்கமல் நிறுவனம், தொடர்ந்து அடுத்தடுத்த ப்ராஜக்ட்களில் பிசியாகியுள்ளது. அதன்படி, STR 48, சிவகார்த்திகேயன் - சாய் பல்லவி இணையும் SK 21 திரைப்படம் என பெரும் ப்ராஜெக்ட்களை ராஜ் கமல் நிறுவனம் தயாரிக்க உள்ளது.


இந்நிலையில் லோகேஷ் உடன் மீண்டும் ராஜ்கமல் நிறுவனம் இணைவது பற்றி தற்போது புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. ஸ்ருதி ஹாசன் - லோகேஷ் இணைந்துள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ள அந்நிறுவனம், “இனிமேல் டெலுலு இஸ் த புது சொலுலு” என 2கே கிட்ஸ்க்கான மொழியில் பதிவிட்டுள்ளது. மேலும் இதுவே ரிலேசன்ஷிப், இதுவே சிச்சுவேசன்ஷிப், இதுவே டெல்யூசன்ஷிப்” என்றும் ஹாஷ் டேகுகளைப் பகிர்ந்துள்ளது.


 இந்நிலையில் மாயை சூழ்ந்த உலகில் இருப்பவர் பற்றிய ஸ்ருதி ஹாசனின் புது ஆல்பமாக இது இருக்கலாம் என ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர். மேலும் ஸ்ருதியிடம் காதல் பார்வை பார்க்கும் வகையில் லோகேஷ் கனகராஜ் இந்தப் பதிவில் இணைந்துள்ள நிலையில், லோகேஷ் இந்த ஆல்பத்தில் நடிக்கவும் செய்கிறாரா என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.


 






லியோ படத்தின் வெற்றிக்குப் பிறகு லோகேஷ் கனகராஜ், அடுத்ததாக தலைவர் 171 படத்தினை ரஜினிகாந்தை வைத்து இயக்க உள்ளார். தற்போது வேட்டையன் படத்தில் பிஸியாக பணியாற்றி வரும் ரஜினிகாந்த், அடுத்ததாக இந்தப் படத்தில் கவனம் செலுத்துவார் எனக் கூறப்படுகிறது.


இப்படத்தின் பூஜை மார்ச் 23ஆம் தேதி தொடங்கும் என்றும், ஐமேக்ஸ் கேமராவில் முழுவதுமாக ஷூட் செய்யப்பட உள்ளதாகவும் ஏற்கெனவே தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. மேலும் இப்படம் தனது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸில் வராது என லோகேஷ் அறிவித்துவிட்ட நிலையில், ரஜினிகாந்த் ரசிகர்கள் இப்படத்தினை பெரிதும் எதிர்பார்த்துக் காத்துள்ளனர். 


மேலும் படிக்க: Vijay: விஜய்யின் அரசியல் எண்ட்ரிக்கு வாழ்த்து சொன்ன ஷாருக் கான்: இந்திய அளவில் ட்ரெண்டாகும் தளபதி


Actor Manikandan: ஆஸ்கர் மேடைல பேச 10 வருஷம் முன்னாடியே ரிகர்சல் செய்தேன்: மணிகண்டன் பகிர்ந்த சுவாரஸ்யம்!