Watch Video : கண்ணு தங்கம் ராசாத்தி.. அம்மாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துச்சொல்லி நெகிழ்ந்த ராதிகா மகள்.. வீடியோ!

நடிகை ராதிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது மகளான ரேயான் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

Continues below advertisement

நடிகை ராதிகாவிற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் வகையில் அவரது மகளான ரேயான் இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார். அந்த வீடியோவில் அம்மா ராதிகாவுடன் சிறு வயதில் இருந்து தான் கழித்த நினைவுகளை புகைப்படங்களாக தொகுத்து பிறந்தநாள் வாழ்த்துகளை அவர் தெரிவித்து இருக்கிறார். 

Continues below advertisement


1978 ஆம் ஆண்டு  ‘கிழக்கே போகும் ரயில்’ படத்தில் நடித்ததின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார். தொடர்ந்து ‘ எங்க ஊரு ராசாத்தி’, ‘ அன்னப்பறவை’ ‘ இன்று போய் நாளை வா’  ‘ மூன்று முகம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்த அவர்  90 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தார். இவர் நடிப்பில் வெளியான ‘கிழக்கு சீமையிலே’‘பசும்பொன்’ ‘  ‘சூரிய வம்சம்’  ‘ஜீன்ஸ்’ உள்ளிட்ட பல படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தொடர்ந்து பட வாய்ப்புகள் குறைந்த நிலையில்,குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

சின்னத்திரைப்பக்கமும் கவனம் செலுத்தி அவருக்கு  ‘சித்தி’  ‘வாணி ராணி’ உள்ளிட்ட சீரியல்கள் ஏகோபித்த வரவேற்பை பெற்றுத்தந்தன. முதலில் மலையாள நடிகர் பிரதாப் போத்தனை திருமணம் செய்து கொண்ட ராதிகா கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்தார். அதன் பின்னர் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ரிச்சார்டு ஹார்டியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ரேயான் ஹார்டி என்ற பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அவரையும் விவாகரத்து செய்த ராதிகா, கடந்த 2004 ஆம் ஆண்டு நடிகர் சரத்குமாரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ராகுல் என்ற மகன் உள்ளார்.

 

ரேயான் கிரிக்கெட் வீரர் அபிமன்யூவை திருமணம் செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola