90களில் பல வெற்றிப்படங்களை கொடுத்து , தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத இயக்குநர்களுள் ஒருவராக இருப்பவர் ஆர்.வி.உதயகுமார்.  கிழக்கு வாசல் , சின்ன கவுண்டர், எஜமான், பொண்ணுமணி உள்ளிட்ட இவர் இயக்கிய படங்கள் இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இவரது சினிமாக்கள் அனைத்திலும், காமெடியில் ஆரம்பித்து பாசப்பிணைப்பை உருவாக்கி, இடையில் அழகிய ஆழமான காதலை சொல்லி, இறுதியில் சூப்பரான எண்டு கார்டு போடுவதில் வல்லவர். இந்த நிலையில் அவர் சினிமா மேடையில் பேசிய வீடியோ ஒன்று அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. அதில் இளம் இயக்குநர்களுக்கு சில காட்டமான அட்வைஸ்களை பகிர்ந்திருக்கிறார் உதயகுமார். 




 


அதில் "புரியாத புதிர் வெளியான காலக்கட்டம். அந்த சமயத்தில் இருந்த இளம் இயக்குநர்களை எல்லாம் அழைத்து ஒரு பேட்டி எடுத்தாங்க மவுண்ட் ரோட்  ஒய்.எம்.சி.ஏ மைதானத்துல. அப்போ எல்லாம் நாங்க சின்ன பசங்க. ஒரு படம் , ரெண்டு படம் இப்படித்தான் எடுத்திருந்தோம். அப்போ எஸ்.டி மோட்டர் சைக்கிள்ல வருவாரு இயக்குநர் ரவிக்குமார். எல்லோரும் ஒன்னா ஒரு மரத்தடியில அமர்ந்து பேட்டி கொடுத்தோம். ரவிக்குமார் இன்றைக்கும் மாறவில்லை. அதே ரவிக்குமார்தான் இன்றைக்கும் இருக்கிறார். அவர் பணத்தால் மட்டும்தான் மாறியிருக்கிறார்., வெற்றியால் மாறியிருக்கிறார். ஆனால் குணத்தால் மாறவில்லை. அதுதான் மனிதனுக்கு  இருக்க வேண்டிய மிகப்பெரிய விஷயம்.ரவிக்குமார் தனது குரு விக்ரமனை எப்படி  மரியாதையுடன் இன்றைக்கு நடத்துகிறாரோ, அதே மாதிரி இப்போது இருக்கும் இளம் இயக்குநர்கள் கடைபிடித்தாலே நல்ல வாழ்க்கை அமையும். நிறைய பேரு, ஒரு அனுபவம் வாய்ந்த அல்லது சீனியர் இயக்குநர்களை கண்டால் மரியாதையே கொடுக்க மாட்டுறானுக. அப்படி என்னடா...


"நகுல் என்னை தேச துரோகியாக பார்க்கிறார்" - தேவயானியை திருமணம் செய்தது குறித்து ராஜகுமாரன் ஓபன் டாக்!


ஒரு படத்தை பார்த்துவிட்டு வியந்து போய், தம்பி நல்லா பண்ணியிருக்கீங்க அப்படினு சொன்னேன். தலையை அசைத்துவிட்டு போயிட்டான். அடுத்த படம் அவன் ஆளே இல்லை. சீனியர் இயக்குநர்களை மதிக்காவிட்டாலும் பராவில்லை. அவமதிக்காம இருக்கனும். அது போதும் . ஒரு படத்துல நடிச்சுட்டு ஒரு படத்தை இயக்கிட்டு ஓவர் பந்தா காட்டுறாங்க. அதெல்லாம் சுருட்டி வச்சுருங்க. இன்னைக்கு கண்டெண்ட்தான் ஜெயிக்கும். செல்வமணி தற்போது ஒரு அருமையான திட்டத்தை கொண்டு வந்துருக்காரு. நல்ல கண்டெண்ட் கொடுங்கப்பா.. நாங்க தயாரிப்பாளரும் தந்து வழிநடத்துறோம்னு. நல்ல படமா எடுக்க எங்களது இளம் இயக்குநர்கள் தயாராக இருக்கிறார்கள். சினிமா காப்பாற்றப்பட வேண்டுமானால் சிறந்த படங்களை தயாரிப்பாளர்கள் தயாரிக்க வேண்டும் “ என ஆர்.வி.உதயகுமார் ஆதங்கத்துடன் பேசியிருக்கிறார்.


 


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூடிபில் வீடியோக்களை காண