'நகுல் என்னை தேச துரோகியாக பார்க்கிறார்' - தேவயானியை திருமணம் செய்தது குறித்து ராஜகுமாரன் ஓபன் டாக்!

மாமியார் எல்லோரும் ஏற்றுக் கொண்டாலும் அவர் மட்டும் இன்னும் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமில்லாமல் அவரவர் வாழ்க்கையில் தனியாக சென்று விட்டார்கள். தேவயானி வீட்டில் யாரும் எங்களுடன் தொடர்பில் இல்லை.

Continues below advertisement

தமிழ் சினிமா ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் நடிகை தேவயானி. தற்போது சின்னத்திரையில் பிஸியாக நடித்து வருகிறார். எப்போதுமே அமைதியாக, சத்தமாக கூட பேசாத நடிகை தேவயானி. இவர் இயக்குநர் ராஜகுமாரனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜகுமாரன் தமிழில் நீவருவாய் என, விண்ணுக்கும் மண்ணுக்கும் போன்ற சில திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். அதோடு கடுகு, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் ஆகிய படங்களில் நடித்தும் உள்ளார். தேவயானி காதல் கோட்டை, சூர்யவம்வம், நீ வருவாய் என என்று, 75 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரையில் இருந்து திருமணம் ஆகி விலகிய பின்னர், சின்னத் திரையிலும் வெற்றி நாயகியாக வலம் வந்தார். 

Continues below advertisement

குறிப்பாக இவர் நடித்திருந்த 'கோலங்கள்' சீரியல் இன்று வரை, இல்லத்தரசிகளால் மறக்க முடியாத சின்னத்திரை சித்திரம் போல் மனதை விட்டு நீங்காத ஒன்று. கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான ‘ராசாத்தி’ சீரியலில் நடித்திருந்தார். பின்னர் அவ்வப்போது ஒரு சில படங்களில் தலைகாட்டி வந்தார் தேவயானி. இயக்குனர் ராஜகுமாரனும், தேவயானியும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இவர்களுக்கு இனியா, பிரியங்கா என்ற இரண்டு மகள்கள் உள்ளார்கள். தற்போதும் தேவயானி பல படங்களில் துணை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும், படங்களை தவிர பல சின்னத்திரை தொடர்களிலும் பிசியாக நடித்து வருகிறார்.

இருவரும் திருமணம் செய்துகொண்டிருந்தாலும், தேவயானி காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. இதனால் தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு எழுந்தது. பின் நண்பர்கள் முன்னிலையில் 2001 ஆம் ஆண்டு திருத்தணி முருகன் கோவிலில் தேவயானி- ராஜகுமாரன் திருமணம் செய்து கொண்டார்கள். மேலும், இவர்கள் திருமணம் செய்து கொண்டதை அறிந்த இரு வீட்டார் பெற்றோர்களும் அவர்கள் மீது கோபத்தில் இருந்துள்ளார்கள். அதிலும் தேவயானியின் குடும்பம் இயக்குனர் ராஜகுமாரன் குடும்பத்தின் மீது போலீஸ் புகார் எல்லாம் அளித்தது அந்த நேரத்தில் பயங்கரமாக பேசப்பட்டது. அதுமட்டுமில்லாமல் தேவயானியின் தம்பி நகுல் இன்று வரை இயக்குனர் ராஜகுமாரன் உடன் பேசுவதில்லையாம். தேவையானிக்கு நகுல், மயூர் என்ற இரண்டு சகோதரர்கள் உள்ளார்கள். தமிழ் சினிமா உலகில் பிரபலமான நடிகர் நகுல் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. தொடக்கத்தில் நகுல் நடித்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தாலும் இப்போது வெற்றிக் கொடுக்க போராடிக் கொண்டிருக்கிறார். இறுதியாக செய் என்ற படத்தில் நடித்திருந்தார் நகுல். ஆனால், அந்த படத்தில் எதிர்பார்த்தபடி வரவேற்பை பெறவில்லை. தற்போது நடிகர் நகுல் சில படத்தில் நடித்து வருகிறார்.

90ஸ் காலகட்டத்தில் நடிகை தேவயானி முன்னனி நடிகையாக திகழ்ந்து வந்தாலும், தேவயானியின் சகோதரருக்கு சினிமாவில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை என்பது தான் உண்மை. அதேபோல் தேவயானியின் இன்னொரு சகோதரர் மயூர். இவர் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் நடிகர் நகுல் குறித்து இயக்குனரும், தேவயானியின் கணவருமான ராஜகுமாரன் சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது, "என்னுடைய மைத்துனர் நகுல் என்னுடன் இன்னும் பேசுவது இல்லை. நான் செய்தது தேசத் துரோகமாக அவர் இன்னமும் நினைத்துக் கொண்டிருக்கிறார். என்னை தேச துரோகக் குற்றத்தில் சம்பந்தப்பட்டவனாகவே பார்க்கிறார். மாமியார் எல்லோரும் ஏற்றுக் கொண்டாலும் அவர் மட்டும் இன்னும் என்னை ஏற்றுக் கொள்ளவில்லை. அது மட்டுமில்லாமல் அவரவர் வாழ்க்கையில் தனியாக சென்று விட்டார்கள். தேவயானி வீட்டில் யாரும் எங்களுடன் தொடர்பில்லை. தேவயானி இன்னொரு தம்பி பூனேவில் வேலை செய்துகொண்டிருக்கிறார். அவர் மட்டும் போனில் எப்போதாவது பேசுவார். ஆனால், நகுல் அவ்வளவாக தேவயானியுடன் பேசுவது கிடையாது. எங்களுக்கு தமிழ்நாட்டு மக்களும், கலை உலகம் தான் உறவுகள்" என்று கூறியிருந்தார். இப்படி இவர் அளித்திருக்கும் பேட்டி தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Continues below advertisement
Sponsored Links by Taboola