கோலிவுட்டின் சாக்லேட் பாய் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் ‘மேடி’ மாதவன். மாதவன் தமிழ் சினிமாவில் நடித்த காலத்தில் மாதவன் என்றால் கிரேஸ் இல்லாதவர்களே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.  அலைபாயுதே கார்த்திக் நம் வாழ்விலும் வரமாட்டாரா என்று ஏங்காதவர்களே இல்லை என்று சொல்லலாம். அப்படத்தில் மிகவும் சிறப்பாக நடித்திருப்பார். 


மாதவன். 1999-ம் ஆண்டு சரிதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். காதல் தம்பதிகள் தங்களது 23-வது திருமண நாளில் இருவரும் தங்களது வாழ்த்துகளையும், ஒருவரை ஒருவர் வாழ்வில் சந்தித்தது எவ்வளவு மகிழ்ச்சியானது என்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். நடிகர் மாதவன் தனது மனைவி குறித்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


 இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தனது மனைவியுடன் இளம் வயதில் எடுத்த புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார் மாதவன், அதில் கோர்ட் சூட் அணிந்து அவர் ஸ்டைலாக நிற்க அவருக்கு அருகில் அவரது மனைவி சரிதா, சிரித்தபடி கம்பீரத்துடன் கொடுத்துள்ளார். மேலும் அதில் “முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு  இப்போது நான் உன்னை மிகவும் காதலிக்கிறேன். இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் wifey ” என பதிவிட்டுள்ளார்.








 சரிதாவும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 23 ஆண்டுகளுக்கு முன்னர் மாதவனை கட்டிப்பிடித்தபடி எடுத்த புகைப்படம் ஒன்றுடன்,  தற்போது எடுத்த புகைப்படத்தையும்  சேர்த்து அன்றும் இன்றும் அதே காதலுடன் இருப்பதாக பதிவிட்டு தனது அன்பை வெளிப்படுத்தி நெகிழ்ந்துள்ளார்.


 மாதவன் - சரிதா திருமண நாளை ரசிர்கள் வாழ்த்துகளை தெரிவித்து கொண்டாடி வருகின்றனர். 


நடிகர் மாதவன் இயக்கி, நடித்து, தயாரித்துள்ள ராக்கெட்ரி திரைப்படம் வருகிற ஜூலை 1-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.


 




 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண