R.K. Suresh Open Talk: ‛ஷாலினி அண்ணியுடன் ஒரே காம்பௌண்டில் வசிக்கிறோம்’ ஆர்.கே.சுரேஷ் சர்ப்ரைஸ் பேட்டி!

'துணிவு' வெளியான பிறகு இயக்குனர் ஹெச். வினோத்தை ரசிகர்கள் தூக்கி கொண்டாடுவார்கள். 'வாரிசு' திரைப்படமும் ஒரு ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் திரைப்படம். இரண்டு படங்களுக்கு வெற்றி பெரும் - ஆர்.கே. சுரேஷ்

Continues below advertisement

தமிழ் சினிமாவின் தயாரிப்பாளர், நடிகர் என பன்முகம் கொண்டவர் நடிகர் ஆர்.கே. சுரேஷ். நடிகர் அஜித் மனைவி மற்றும் நடிகையான ஷாலினியுடன் ஆர்.கே. சுரேஷ் குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று ட்விட்டர் பக்கத்தில் தாறுமாறாக வைரலானது. அது குறித்த சில ஸ்வாரஸ்யமான தகவல்களை சமீபத்தில் நடைபெற்ற ஒரு நேர்காணலில் தெரிவித்துள்ளார் ஆர்.கே. சுரேஷ்.

Continues below advertisement

 

அவர் நேர்காணலில் பகிர்ந்த சில தகவல்களில் "ஷாலினி அண்ணி அவருடைய அண்ணன் ரிச்சர்ட் நான் என அனைவருமே குழந்தை பருவம் முதல் நண்பர்கள். அஜித் அண்ணனை எனக்கு காதல் கோட்டை படத்தில் இருந்தே மிகவும் பிடிக்கும். அவரின் மிக பெரிய ரசிகனானது தீனா திரைப்படத்திற்கு பிறகு தான். இன்று அவர் வேற லெவலில் இருக்கிறார். அவரை நான் தூரத்தில் இருந்தே ரசித்து கொள்கிறேன். நேரில் அண்ணனை பார்த்தாலும் அவருடன் நெருங்கி போட்டோ எடுத்துக்கொள்ள கூட முடிவதில்லை. அவருக்கு தெரியாத டாபிக் என்று எதுவுமே கிடையாது. அந்த அளவிற்கு திறமையானவர். இது பலருக்கும் தெரியாது. பைக்கிங் செய்வது அவரின் கனவு. அதை அவர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிறைவேற்றி கொள்கிறார். நாங்களும் ஷாலினி அண்ணியும் ஒரே காம்பௌண்டில் வசிக்கிறோம். தீபாவளி கொண்டாட்டத்தில் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படம் தான் அது" என விளக்கமளித்துள்ளார் ஆர்.கே. சுரேஷ். 

 

 

பொங்கல் ரிலீஸ் குறித்து விளக்கம் :

துணிவு மற்றும் வாரிசு திரைப்படம் இரண்டும் 2023 பொங்கலுக்கு வெளியாவது குறித்த கேள்விக்கு பதில் அளிக்கையில் " துணிவு திரைப்படம் வெளியான பிறகு இயக்குனர் ஹெச். வினோத்தை ரசிகர்கள் தூக்கி கொண்டாடுவார்கள். அந்த அளவிற்கு ஒரு மாஸான திரைப்படம். அதே போல் வாரிசு திரைப்படமும் ஒரு முழுக்க முழுக்க ஃபேமிலி என்டர்டெயின்மென்ட் திரைப்படம். குடும்பமாக சேர்ந்து பார்க்கக்கூடிய ஒரு திரைப்படம். அனைவருக்கும் அந்த கதைக்களம் மிகவும் பிடிக்கும். இரண்டு படங்களின் திரைக்கதையும் எனக்கு தெரியும். இரண்டுமே சூப்பர் ஹிட் படங்களாக வெற்றி பெரும்" என்றார். 

 

எந்த படம் வெற்றி பெரும் ?

மேலும் கூறுகையில் "இரண்டு திரைப்படங்களையும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுவதால் வணிக ரீதியாக அதன் ஒட்டுமொத்த வசூலில் சிறிய அளவு பாதிப்பு ஏற்படும் என்பது எனது கணிப்பு. முதல் மூன்று நான்கு நாட்களுக்கு இரண்டு படங்களுமே டஃப் கொடுக்கும். அதை வைத்து ஒரு கணிப்பிற்கு வரமுடியாது. ஆனால் அஜித் அண்ணன், விஜய் அண்ணன் இருவரின் படங்களும் நிச்சயமாக வெற்றி பெற வேண்டும் அப்போது தான் எங்களை போன்ற கலைஞர்களுக்கு வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்" என்றார் ஆர்.கே. சுரேஷ். 

அந்த வகையில் அவர்கள் இருவரின் படங்களிலும் நீங்கள் நடிக்க வாய்ப்பு இருக்கிறதா என்று கேட்டதற்கு நிச்சயமாக இருக்கும் அது குறித்த அறிவிப்பு வெளியாகும் என சஸ்பென்ஸுடன் கேள்வியை முடித்துக்கொண்டார் நடிகர் ஆர்.கே. சுரேஷ்.

 

 

Continues below advertisement
Sponsored Links by Taboola