ஆர்.ஜே பாலாஜி  நடித்து கோகுல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது


ஆர். ஜே பாலாஜி


 நடிகர் , ஆர்.ஜே,, காமெடியன்,  இயக்குநர் என பல பரிணாமங்களை வெளிப்படுத்தி வருபவர் ஆர். ஜே பாலாஜி. எல்.கே.ஜி படத்தின் மூலமான கதநாயகனாக அறிமுகமாகினார். தொடர்ந்து மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்டப் படங்களில் நடித்த ஆர்.ஜே பாலாஜி  நடிப்பில் அடுத்தடுத்தப் படங்கள் வெளியாக இருக்கின்றன. 


சிங்கப்பூர் சலூன்






இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, காஷ்மோரா உள்ளிட்டப் படங்களை இயக்கிய கோகுல் இயக்கத்தில் தற்போது ஆர்.ஜே பாலாஜி நடித்திருக்கும் படம் சிங்கப்பூர் சலூன். ஆர்.ஜே பாலாஜி, சத்யராஜ், லால், கிஷன் தாஸ், மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான் விஜய், ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். விவேக் மெர்வின் இசையமைத்து ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் ஜனவரி 25 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.


ட்ரெய்லர் எப்படி



தனது ஊரில் இருக்கும் ஒரு சலூன் கடைக்காரரைப் பார்த்து தானும் ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக வேண்டும் என்று ஆசைப்படும் கதாநாயகன் (ஆர்.ஜே பாலாஜி). ஊரில் இருக்கும் எல்லாரும் மருத்துவம் , பொறியியல் என்று ஓடிக்கொண்டிருக்க சலூன் கடை ஆரம்பிக்க வேண்டும் என்கிற  நாயகனின் ஆசை பல கேள்விகளை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கிறது. சொந்தமாக சலூன் ஆரம்பித்து அதில் தனக்கு போட்டியாளராக வரும் எதிரிகளை சமாளித்து ஆர்.ஜே பாலாஜி தனது சிங்கப்பூர் சலூனை பாதுகாத்தாரா என்பது இப்படத்தின் கதை. சுவாரஸ்யத்தை கூட்டும் வகையில் இப்படத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் மற்றும் ஜீவா இருவரும் கெளரவ கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். சலூன் கடை எல்லாம் நம்ம குலத்தொழில் இல்லப்பா என்று சொல்லும் தலைவாசல் விஜயிடம் “அப்போ இஞ்சினியரிங் நம்ம குலத் தொழிலா” என்று கேட்கும் வசனம் கவனத்தை ஈர்க்கிறது. மொத்தத்தில் இந்த ட்ரெய்லர் படத்தின் மீதான ஒரு நல்ல அபிப்பிராயத்தை ரசிகர்களிடம் ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.


சொர்கவாசல்


சிங்கப்பூர் சலூன் படத்தைத் தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி நடித்து வரும் படம் சொர்க்கவாசல். சித்தார்த் விஸ்வநாத் இப்படத்தை இயக்குகிறார். தமிழ் , தெலுங்கு , இந்தி, மலையாளம் , கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. இப்படத்தின் ஓடிடி உரிமத்தை நெட்ஃப்ளிக்ஸ் பெற்றுள்ளது