தமிழ் சினிமாவில் பிளாஷ் பேக் கதைகளில் இதயங்களை கட்டிப் போட்ட எத்தனையோ படங்கள், ஒவ்வொரு காலகட்டத்திலும் வந்து சென்றிருக்கிறது. அந்த வகையில் கடைசியாக வந்து சென்ற படம், 96. தமிழ் மட்டுமல்லாது பிற மொழிகளிலும் பின்னர் ரீமேக் செய்யப்படும் அளவிற்கு கதையில் நல்ல ஈரம் இருந்தது. தமிழில் கதையோடு பாடல்களுக்கு நல்ல வரவேற்பும் இருந்தது. குறிப்பாக, ‛கரை வந்த பிறகே’ பாடல், நல்ல வரவேற்பை பெற்றது. 



கோவிந்த் மேனனின் இசையில், அனைத்து பாடல்களும் ரம்யம் என்றாலும், ‛ராம் லைப்’ என்கிற வரியில், இயற்கையை தேடிச் செல்லும் ஒருவனின் வாழ்வியலை, ஒரு பாடலில் சொல்லி முடிக்கும் ‛கரை வந்த பிறகே...’ பாடல், பலரின் ரிங்டோனாகவும், காலர் ட்யூனாகவும் இருந்தது. அந்த சீசன் முடிந்தும் போய்விட்டது.


இந்நிலையில் பேட்மிட்டன் வீராங்கணையான பி.வி.சிந்து, தனது இன்ஸ்டாவில் ஒரு வீடியோ பதிவிட்டுள்ளார். அதில் ராம் படத்தின் பாடலை பின்னணியில் போட்டு வீடியோ பதிவிட்டுள்ளார். ரம்யமான அந்த பாடலின் பின்னணியில், ஸ்லோமோஷனில் பி.வி.சிந்து சுற்றி வரும் வீடியோ, பார்க்க ரம்யமாக உள்ளது. 






 


வெள்ளை நிற ஆடையில், ஊதா நிற துப்பட்டா அணிந்து பாடல் இசைக்கு ஏற்றவாறு சுற்றி வரும் சிந்துவின் புன்னகையும், பூரிப்பும் அவரது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக உள்ளது. அவர் மகிழ்ச்சிக்கான காரணம் என்னவென்று தெரியாத நிலையில், 96 ஜானுவை விட, சிந்து உற்சாகத்தில் மிதக்கிறார் என கமெண்டில் கட்டுரை எழுதத் தொடங்கிவிட்டனர் ரசிகர்கள். விஜய் சேதுபதி வாழ்க்கையை ரீலில் வாழ்ந்து பார்த்த சிந்து என புகழ்ந்து தள்ளுகிறது இன்னொரு கூட்டம்!