அதீத வெற்றி பெற்று இந்தியாவில் அதிர்வு அலைகளை ஏற்படுத்திய புஷ்பாவின் முதல் பாகத்தை ரஷ்யாவில் ரிலீஸ் செய்வதற்காக புஷ்பா படத்தின் குழுவினர் அந்நாட்டிற்கு சென்றுள்ளனர். ரஷ்யா நாட்டிற்கு சென்ற  இப்படத்தின் குழுவினர் அனைவரையும் மலர்கொத்து கொடுத்து வரவேற்றுள்ளனர். 


இது தொடர்பான செய்திகளையும், ரஷ்யாவில் எடுக்கப்பட்ட போட்டோக்களையும் சமூக வலைதளத்தில் புஷ்பா படத்தின் குழுவினர் ஷேர் செய்துள்ளனர் . ரஷ்யன் மொழியில் டப் செய்யப்பட்ட ட்ரெய்லரையும் அவர்கள் வெளியிட்டனர். 






ரஷ்யாவில் வரும் டிசம்பர் 8 ஆம் தேதி வெளியாகும் இப்படத்தின் ப்ரிமியர் ஷோக்கள், டிசம்பர் 1 மற்றும் 2 ஆம் தேதி திரையிடப்படவுள்ளது. அதுபோக, மாஸ்கோ நகரில் டிசம்பர் 1 ஆம் தேதியிலும், செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் டிசம்பர் 3 ஆம் தேதியிலும் ஸ்பெஷல் ப்ரிமியர் ஷோ திரையிடப்படவுள்ளது. புஷ்பா வெளியாகும் அதே நாளில்,  “ஆர் ஆர் ஆர்”, “மை நேம் இஸ் கான்”,   “டிஸ்கோ டான்ஸ்”,  “தங்கல்” மற்றும் “ வார்” ஆகிய படங்களும் திரையிடப்படவுள்ளது.


 


புஷ்பாவின் இரண்டாம் பாகத்தின் ஷூட் :


புஷ்பா தி ரைஸ் என்ற முதல் பாகத்தின் வெற்றிக்கு பிறகு அதன் தொடர் கதையாக , ”புஷ்பா தி ரூல்”படத்தின் ஷுட் கூடிய விரைவில் துவங்கவுள்ளது என்ற அறிவிப்பும் வெளிவந்துள்ளது.






தற்போது, புஷ்பா இரண்டாம் பாகத்தில் இருக்கும் அல்லு அர்ஜுனின் ஃபர்ஸ்ட் லுக் டிசம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் என்ற தகவல் பரவிவருகிறது. சுகுமார் இயக்கத்தில் புஷ்பா ராஜ் என்ற பெயரில் அல்லு அர்ஜனும்,  ஸ்ரீவல்லி என்ற பெயரில் ராஷ்மிகாவும் நடித்து இருந்தனர். கூடுதலாக, ஃபஹத் ஃபாசில் பன்வர் சிங் ஷெகாவத் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார் என்பது குறிப்பிடதக்கது.