Samantha in Pushpa: புஷ்பா படத்தில் ஐட்டம் சாங் ஆடும் சமந்தா..? வருந்தும் ரசிகர்கள்!

இயக்குநர் சுகுமார் தனிப்பட்ட முறையில் வைத்த கோரிக்கையை ஏற்று ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.

Continues below advertisement

முன்னணி நாயகியான சமந்தா தெலுங்கு படமான புஷ்பாவில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இது சமந்தா ரசிகர்களை கவலையடைய வைத்துள்ளது. 

Continues below advertisement

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ‘புஷ்பா’. மிகப்பெரிய பட்ஜெட்டில்  மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் ’புஷ்பா’ படத்தை தயாரித்து வருகிறது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் இந்த படத்தில் ஒப்பந்தமாகி நடித்துள்ளனர். புஷ்பா படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளது. இந்த படத்தின் முதல் பாகம் எப்போது வெளியாகும் என எதிர்பார்த்தவர்களுக்கு  இந்த ஆண்டு கிருஸ்துமஸ் விடுமுறையின் பொழுது படம் ரிலீஸ் ஆகும் என்ற அறிவிப்பை கொடுத்து இன்ப அதிர்ச்சி ஏற்படுத்தியது.  படத்தின் சிங்கிள் டிராக்கை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது.  இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ’ஓடு ஓடு ஆடு' என்கிற சிங்கிள் டிராக்கும் வெளியானது. இந்த பாடல் தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் , பென்னி தயால் குரலில் உருவாக்கப்பட்டது.  

Bigg Boss 5 Tamil: பிக் பாஸின் 5வது எலிமினேஷன்... ஆரம்பம் முதல் கடைசி வரை ஒரே மாதிரி இருந்து எலிமினேட் ஆன மது


படம் ஏற்கனவே தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், இந்தி என  ஐந்து மொழிகளில் உருவாகி வருகிறது. தற்போது வெளியாகியுள்ள இந்த சிங்கிள் டிராக்கும் ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ளது. முன்னதாக படத்தின் ஃபஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த சிங்கிள் டிராக்கையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். புஷ்பா திரைப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல், மற்றும்  மரம் கடத்தலை மையமாக வைத்தும்...  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில்படத்தின் மேலும் ஒரு அப்டேட்டாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நடிகை சமந்தா புஷ்பாவில் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாட இருப்பதாக கூறப்படுகிறது.

Watch Video | மாலத்தீவு கடலில் நீச்சல் உடையில் பீச் டான்ஸ் ஆடிய பூஜா! வைரல் வீடியோ!

இயக்குநர் சுகுமார் தனிப்பட்ட முறையில் வைத்த கோரிக்கையை ஏற்று ஒரு பாடலுக்கு நடனமாட சமந்தா ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த விஷயத்தால் சம்மு பேன்ஸ் கவலையில் ஆழ்ந்துள்ளனர். தெலுங்கில் முன்னணி நாயகியாக இருக்கும் நிலையில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடத்தான் வேண்டுமா என கேள்வி எழுப்பி வருகின்றனர். சமந்தா நடனம் ஆடும் இப்பாடலை ஏற்கெனவே தேவி ஸ்ரீ பிரசாத் உருவாக்கி விட்டதாகவும் விரைவில் படப்பிடிப்பு எனவும் கூறப்படுகிறது.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

Continues below advertisement
Sponsored Links by Taboola