சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய ஐந்து மொழிகளில் இப்படம் நேற்று (டிச.17) உலகமெங்கும் வெளியானது. ஃபகத் பாசில், ராஷ்மிகா மந்தனா, ஜெகபதி பாபு, பிரகாஷ்ராஜ், கிஷோர், சுனில், அஜய் கோஷ், ஹரீஷ் உத்தமன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  நடிகை சமந்தா ஊ சொல்றியா மாமா ஊஹும் சொல்றியா மாமா என்ற பாடலுக்கு நடனமாடியுள்ளார். 


நேற்று வெளியான புஷ்பா படம் ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றுவருகிறது. அதேசமயம் வசூல் ரீதியாக புஷ்பா படம் பல படங்களை பின்னுக்கு தள்ளியுள்ளது.


கரோனா ஊரடங்குக்குப் பிறகு வெளியான படங்களில் இதுவரை ‘சூர்யவன்ஷி’ படமே அதிக வசூல் சாதனை செய்த படமாகக் கருதப்பட்டு வந்தது. அப்படம் வெளியான முதல் நாளில் ரூ.26.29 கோடி வசூலித்தது. இதனை கடந்த டிச.16ஆம் தேதி அன்று வெளியான 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படம் வெளியாகி முதல் நாளில் ரூ.32.67 கோடி வசூல் செய்து  சூர்யவன்ஷியை பின்னுக்கு தள்ளியிருந்தது.




இந்நிலையில் நேற்று வெளியான ‘புஷ்பா’ திரைப்படம், ‘ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்’ படத்தைப் பின்னுக்குத் தள்ளி ரூ.48 கோடி வசூலித்துள்ளது. இதன் மூலம் ‘அண்ணாத்த’, ‘மாஸ்டர்’, ‘வக்கீல் சாப்’ உள்ளிட்ட படங்களையும் ‘புஷ்பா’ பின்னுக்குத் தள்ளியிருக்கிறது.


அதுமட்டுமின்றி, தெலங்கானா மாநிலத்தில் ஹைதராபாத், செகந்திராபாத் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய நிசாம் பகுதியில் ஒருநாளில் 16.50 கோடி ரூபாயை வசூலித்துள்ளது. ஆந்திராவில் பத்து கோடி ரூபாயை வசூல் செய்துள்ளது.


அதேபோல் தமிழ்நாட்டில் நான்கு கோடி ரூபாயும், கேரளாவில் 1.5 கோடி ரூபாயும், கர்நாடகாவில் 6.50 கோடி ரூபாயும், வட இந்தியாவில் ஐந்து கோடி ரூபாயையும் புஷ்பா வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. துல்லியமான வசூல் விவரங்களை தயாரிப்பு தரப்பு விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க:Pushpa Review: புஸ்ஸா....? புஸ் அவுட்டா...? புஷ்பா படம் எப்படி இருக்கு? உள்ளதை சொல்லும் விமர்சனம்!


Pushpa Meme Review: அந்த பாட்டும், அந்த க்ளைமேக்ஸும்... புஷ்பா மீம் ரிவ்யூ