Pushpa 2 The Rule: அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளியாக இருக்கும் ’புஷ்பா2 தி ரூல்’ படம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் வெளிவந்த புஷ்பா படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா, சுனில், அனசூயா, தனஞ்செயா என பலர் நடித்திருந்த படத்திர்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசை அமைத்திருந்தார். இந்த படம் தெலுங்கு, தமிழ், இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி வசூலில் சாதனை படைத்தது. படத்தில் இடம்பெற்றிருந்த பாடல்களும் மெகா ஹிட் அடித்து டிரெண்டானது. தேவி ஸ்ரீ பிரசாத் இசையில், ஆண்ட்ரியா பாடிய ம்ம் சொல்றீயா.. ம்ம்ம் சொல்றீயா பாடலும், அந்த பாடலில் இடம்பெற்ற சமந்தாவின் நடனமும் படத்தை இந்தியா முழுவதும் கொண்டு சென்றது. முதல் பாகத்தை போலவே 2ம் பாகத்திலும் இந்தியா முழுவதும் சென்றடையும் விதத்தில் ஒரு குத்து பாடலை உருவாக்க படக்குழு திட்டமிட்டுள்ளது. அண்மையில் அறிவிக்கப்பட்ட தேசிய திரைப்பட விருதில் புஷ்பாவில் நடித்ததற்காக சிறந்த நடிகராக அல்லு அர்ஜூன் தேர்வானார்.
படத்தின் இரண்டாம் பாகத்தில் வரும் ஃபகத் பாசில் அடுத்த பாகத்திற்கான எதிர்பார்ப்பை கொடுத்திருந்தார். இந்த நிலையில், முதல் பாகத்தை விட அதிக பட்ஜெட்டில் புஷ்பா பாகம் 2 உருவாகி வருகிறது. இதில் மெயின் வில்லனாக ஃபகத் பாசில் இருப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. புஷ்பா 2 தி ரூல் போஸ்டர்களும், பிறந்த நாளை ஒட்டி ஃபகக் பாசில் போட்டோவும் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இந்த நிலையில் புஷ்பாவின் ஒவ்வொரு அப்டேட்டாக கொடுத்து வரும் படக்குழு அதன் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 15 தேதி சுதந்திர தினத்தன்று புஷ்பா 2 தி ரூல் ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் புஷ்பா 2 படத்துக்காக வெயிட்டிங் என கமெண்ட் பதிவிட்டு வருகின்றனர்.
மேலும் படிக்க: Entertainment Headlines Sep 11: தலைவர் 171 அறிவிப்பு... கவலையில் ஏ.ஆர்.ரஹ்மான்... ரூ.500 கோடி அள்ளிய ஜவான்.. இன்றைய சினிமா செய்திகள்!