1000 கோடி வசூல் செய்வதே லியோ படத்தின் இலக்காக இருக்கும் நிலையில் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் ரஜினிகாந்தின் 171 படம் மீதும் எதிர்பார்ப்புகள் அதிகரித்துள்ளன. மீண்டும் ஒரு முறைய வசூல் மன்னனாக சாதிப்பாரா ரஜினிகாந்த்?


தலைவர் 171


தற்போது சன் பிக்சர்ஸ் வெளியிட்டிருக்கும் தகவலின்படி ரஜினிகாந்தின் 171-வது படத்தையும் சன் பிக்சர்ஸ் தயாரிக்க இருக்கிறது அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்க லியோ இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இந்தப் படத்தை இயக்க இருக்கிறார். அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் தீபாவளி அன்று இந்தப் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டிருப்பதாகவும் தெரியவந்துள்ளது. இதனால் ரஜினி மற்றும் லோகேஷ் கனகராஜ்  ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.


சன் பிக்சர்ஸ் கூட்டணி


 இதற்கு முன்பாக ரஜினியுடன்  நான்கு முறை ரஜினியுடன் கூட்டணி அமைத்திருக்கும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் ஐந்தாவது முறையாக ரஜியின் படத்தை தயாரிக்கிறது. அந்த ஐந்து படங்கள் இவை..


ஜெயிலர்


சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் கீழ் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் அதிக வசூல் ஈட்டிய படங்களில் இரண்டாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. முதல் இடத்தில் ஷங்கர் இயக்கி ரஜினி நடித்த 2.0 படம் பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.  நெல்சன் திலீப்குமார் இயக்கிய ஜெயிலர் திரைப்படத்தில்  ரஜினிகாந்த், மோகன்லான், ஷிவராஜ் குமார், ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி , விநாயகன் உள்ளிட்டவர்கள் நடித்து அனிருத் இசையமைத்த இந்தப் படம் சுமார் ரூ 600 கோடிகளுக்கு மேலாக  வசூல் செய்ததது. இதனால் மகிழ்ச்சி அடைந்த சன் பிக்சர்ஸ் நிறுவனம் ரஜினிகாந்த், நெல்சன் மற்றும் அனிருத் ஆகிய மூவருக்கும் சொகுசுக் கார் பரிசளித்ததுடன். படத்தில் பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கு தங்க நாணையமும் பரிசாக வழங்கியது.


1000 கோடி வசூல் இலக்கு


லோகேஷ் கனகராஜ் இயக்கியிருக்கும் லியோ திரைப்படம் உலகளவில் 1000 கோடிகளை வசூல் செய்யும் என எதிர்பார்க்கப் படுகிறது. லியோ திரைப்படம் வெளியாவதற்கு 40 நாட்களுக்கு முன்னதாக இங்கிலாந்தில் படத்திற்கான முன்பதிவுகள் தொடங்கியது. வெறும் 24 மணி நேரத்திற்குள்ளாக 10 ஆயிரம் டிக்கெட்கள் விற்று சாதனை  படைத்துள்ளது லியோ. இது படத்தின் மீதான எதிர்பார்ப்பையே காட்டுகிறது.


மறுபக்கம் தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக திகழ்ந்து வருகிறார் ரஜினிகாந்த். ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த 2.0 திரைப்படம் இன்றுவரை அதிக வசூல் ஈட்டிய தமிழ் திரைப்படங்களின் பட்டியலில் முதல் இடத்தில் இருந்து வருகிறது. இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த லோகேஷ் கனகராஜ் இயக்கிய விக்ரம் திரைப்படம் இருந்தது. தற்போது விக்ரம் மற்றும் இரண்டாவது இடத்தில் இருனத பொன்னியின் செல்வன் படங்களை பின்னுக்குத் தள்ளி 600 கோடிகளுக்கும் மேல் வசூல் செய்த ஜெயிலர் திரைப்படம் இரண்டாவது  இடத்தைப் பிடித்துள்ளது. தற்போது லோகேஷ் கனகராஜ் மற்றும் ரஜினியின் கூட்டணி அனைத்து வசூல் சாதனைகளையும் முறியடித்து புதிய சாதனைகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. ஒருவேளை லியோ திரைப்படம் 1000 கோடிகளை வசூல் செய்யாவிட்டாலும் நிச்சயம் தலைவர் 171 படம் அதை நெருங்கும் என எதிர்பார்க்கலாம்.


எல்.சி.யு


அதே நேரத்தில் எல்லா லோகேஷ் கனகராஜ் திரைப்படங்களுக்கு வரும் விவாதம் போல் ரஜினியின் இந்தப் படம் லோகேஷ் சினிமாட்டில் யுனிவர்ஸில் வருமா அல்லது தனி படமாக உருவாகுமா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. இரு தரப்பு விவாதங்களுக்கும்  ஒரே அளவு சாத்தியங்கள் இருப்பதால் ரசிகர்கள் பொறுத்திருப்பது தான் ஒரே வழி.


தலைவர் 170


தற்சமயம் ரஜினிகாந்த் தனது தலைவர்170 படத்தின் படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளார். ஜெய் பீம் படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இந்தப் படத்தை இயக்க அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார். பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், மஞ்சு வாரியர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் முக்கிய் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது.