Pushpa 2: அல்லு அர்ஜூனுக்கும் புஷ்பா 2 இயக்குநருக்கும் மோதலா? தாடியை நீக்க இதுதான் காரணமா?

புஷ்பா படத்தின் இயக்குநர் சுகுமார் மற்றும் படத்தின் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்ட காரணத்தினால் படப்பிடிப்பு ஒத்திவைக்கப் பட்டுள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன

Continues below advertisement

புஷ்பா 2

சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான படம் புஷ்பா. ராஷ்மிகா மந்தனா மற்றும் ஃபகத் ஃபாசில் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர். தெலுங்கு சினிமாவில் மட்டும் இல்லாமல் பான் இந்திய வெற்றிபடமாக புஷ்பா படம் அமைந்தது. மேலும் இப்படத்திற்காக அல்லு அர்ஜூன் சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை தேவிஸ்ரீ பிரசாத் வென்றனர். முதல் பாகத்தின் வெற்றியைத் தொடர்ந்து  இதனைத் தொடர்ந்து புஷ்பா 2 மிக பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது. முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தின்மேல் ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புகள் வைத்துள்ளார்கள்.

Continues below advertisement

முதலில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வெளியாகிய புஷ்பா 2  வரும் டிசம்பர் மாதம் 6ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது. அதோடு, படத்திற்கான புதிய போஸ்டர் ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது. ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஃபகத் பாஷில் வில்லனாகவும் நடித்துள்ள இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.  சுமார் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இத்திரைப்படம் உருவாகியுள்ளது. கடத்தல்காரர்களை மையப்படுத்தி புஷ்பா திரைப்படத்தின் கதைக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் பாகத்தில் கூலித்தொழிலாளியாக இருந்த புஷ்பா எப்படி, பெரும் சாம்ராஜ்ஜியத்தை கட்டி எழுப்புகிறான் என்பது காட்டப்பட்டது. இரண்டாம் பாகத்தில் தான் கட்டி எழுப்பிய சாம்ராஜ்ஜியத்தை ஒட்டுமொத்த அரசு இயந்திரத்தையும் எதிர்த்து எப்படி காப்பாற்றப்போகிறான் என்பது படமாக்கப்பட்டுள்ளது.

அல்லு அர்ஜூன் சுகுமார் இடையில் வாக்குவாதம்

படத்தின் படப்பிடிப்பு முடிய இன்னும் ஒரு மாத காலம் இருக்கும் நிலையில் படத்தின் இயக்குநர் சுகுமார் மற்றும் அல்லு அர்ஜூன் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இடைவெளி எடுத்துள்ளதும் இந்த தகவலை உறுதிப் படுத்தும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநருடன் ஏற்பட்ட வாக்கு வாதம் காரணத்தினால் அல்லு அர்ஜூன் புஷ்பா கெட் அப்காக வைத்திருந்த தனது தாடியை நீக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. தனது தாடியை குறைத்த லுக்கில் அல்லு அர்ஜூன்  விமானத்தில் இருக்கும் வீடியோவை ரசிகர்கள் பகிர்ந்துள்ளார்கள்.  ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகிறது.

 நடிகர் அல்லு அர்ஜூனின் சமூக வலைதள அட்மின் இந்த தகவல்களை மறுத்துள்ளார். மேலும் படத்தின் முதல் பாகம் எடிட் செய்யப் பட்டு ரெடியாகிவிட்டதாகவும் இரண்டாம் பகுதிக்கான எடிட் வேலைகள் சென்றுகொண்டிருப்பதால் படக்குழு ஒரு சிறிய விடுமுறை எடுத்துக் கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். ஆனால் அல்லு அர்ஜூன் தனது தாடியை நீக்கியுள்ளது ரசிகர்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Continues below advertisement
Sponsored Links by Taboola