அல்லு அர்ஜூன்
முன்னணி தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூன் தனது 42ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான அல்லு அர்ஜூன் 2003ஆம் ஆண்டு வெளியான கங்கோத்ரி படத்தில் நாயகனாக அறிமுகமானார். ஆக்ஷன், டான்ஸ் என ரசிகர்களை பல படங்களில் என்டர்டெயின் செய்திருக்கிறார் அல்லு அர்ஜூன். புஷ்பா படத்தின் மூலமாக பான் இந்திய நடிகராக உருவெடுத்த அல்லு அர்ஜூன் சிறந்த் நடிகருக்கான தேசிய விருது வென்ற முதல் தெலுங்கு நடிகர் என்கிற பெருமைக்குரியவர். அல்லு அர்ஜூனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்துள்ள புஷ்பா படத்தின் டீசர் இன்று வெளியாக இருக்கிறது. வரும் ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி இப்படம் திரையரங்கில் வெளியாகும். நடிகர் அல்லு அர்ஜூனின் மொத்த சொத்து மதிப்பு குறித்த விபரங்களைப் பார்க்கமாம்.
மொத்த சொத்த மதிப்பு
தென் இந்திய நடிகர்களில் அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் அல்லு அர்ஜூனின் பெயரும் அடக்கம். அவருடைய தற்போதைய மார்கெட்படி ஒரு படத்திற்கு ரூ.100 கோடிக்கும் மேலாக சம்பளம் வாங்குகிறார். அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.460 கோடிகளாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. நடிப்பு தவிர்த்து சொந்தமாக அமெரிக்க நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள ரெஸ்டாரெண்ட் ஒன்றையும் நடத்தி வருகிறார். அல்லு அர்ஜூன் அவ்வப்போது இந்த ரெஸ்டாரெண்டின் கல்லாவில் அமர்ந்து அங்குவரக் கூடிய தொழிலதிபர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் உடன் உற்சாகமாகவும் உரையாடுவாராம். மேலும் ஹைதராபாதில் அல்லு அர்ஜூன் ஸ்டுடியோஸ் என்கிற ஸ்டுடியோவும் உள்ளது.
மேலும் ஹைதராபாத்தில் பிரபலங்கள் வசிக்கும் ஜுபிலி ஹில்ஸ் பகுதியில் அல்லு அர்ஜூனுக்கு சொகுசு வீடு ஒன்றும் இருக்கிறது. இந்த வீட்டின் மொத்த மதிப்பு ரூ.100 கோடி வரை இருக்கலாம். இதுதவிர்த்து சொந்தமாக பிரைவேட் ஜெட் ஒன்றையும் அவர் வைத்திருக்கிறார்.
இந்த விமானத்தின் விலை ரூ.80 கோடி. மெர்சிடிஸ், ஜாகுவார், ரேஞ்சு ரோவர், ஹம்மர் என பல சொகுசு கார்களையும் வைத்திருக்கிறார். RedBus, Coca-Cola, Hotstar, KFC, Joyalukkas மற்றும் Zomato ஆகிய நிறுவனங்களுக்கு பிராண்ட் அம்பாஸடராக இருந்து வருகிறார் அல்லு அர்ஜூன். சின்ன விளம்பரங்களுக்கு 35 முதல் 60 லட்சமும் பெரிய விளம்பரங்களுக்கு ரூ.4 கோடி வரையும் அவர் சம்பளம் வாங்குவதாகக் கூறப்படுகிறது. புகையிலை விளம்பரம் ஒன்றில் அல்லு அர்ஜூனை நடிக்க கேட்டபோது அதில் அவர் நடிக்க மறுத்தும் விட்டிருக்கிறார்.
புஷ்பா 2
சுகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் புஷ்பா 2. ராஷ்மிகா மந்தனா, ஃபகத் ஃபாசில் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். தேவிஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார்.