ஐபிஎல் 2024ன் 22வது போட்டியில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் மோதியது. இந்த போட்டியில் சென்னை வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே சரித்திரம் படைத்தார். துஷார் தேஷ்பாண்டே வீசிய ஆட்டத்தின் முதல் பந்திலேயே கொல்கத்தா வீரர் பிலிப் சால்ட் ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.
இதன்மூலம் ஐபிஎல் போட்டியின் முதல் பந்திலேயே அவுட்டான 25வது வீரர் என்ற மோசமான சாதனையை படைத்தார் பிலிப் சால்ட். இவருக்கு முன், பார்த்திவ் படேல், கவுதம் கம்பீர், ஜாக் காலிஸ், பிரெண்டன் மெக்கல்லம், சுப்ரமணியம் பத்ரிநாத், சனத் ஜெயசூர்யா, மனோஜ் திவாரி, மைக்கெல் லம்ப், மயங்க் அகர்வால், எஸ். அனிருதா, உன்முக்த் சந்த், குசல் பெரேரா, டுவைன் ஸ்மித், கிறிஸ் கெய்ல், ஷிகர் தவான், ஜோ டென்லி, பிரித்வி ஷா, மார்கஸ் ஸ்டோனிஸ், கே.எல்.ராகுல், விராட் கோலி, டேவிட் வார்னர், பிரப்சிம்ரன் சிங் ஆகியோர் ஆட்டத்தின் முதல் பந்திலேயே ஆட்டமிழந்தனர்.
போட்டியின் முதல் பந்திலேயே பிலிப் சால்ட் ஆட்டமிழப்பது இது இரண்டாவது முறையாகும். முன்னதாக, கடந்த 2023ம் ஆண்டு குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது ஷமி போட்டியின் முதல் பந்திலேயே பிலிப் சால்டை அவுட்டாகினார். அப்போது, பிலிப் சால்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக விளையாடினார்.
இதையடுத்து பிலிப் சால்ட், பார்த்திவ் படேல், காலிஸ், மெக்கல்லம், மயங்க் யாதவ் மற்றும் கோலி ஆகியோர் ஆட்டத்தின் முதல் பந்திலேயே தலா இரண்டு முறை ஆட்டமிழந்தனர். மேலும், போட்டியின் முதல் பந்திலேயே அவுட்டான கொல்கத்தா அணியின் ஐந்தாவது வீரர் என்ற பெருமையை சால்ட் பெற்றார். இதற்கு முன், 2009ல் மெக்கலம், 2010ல் மனோஜ் திவாரி, 2014ல் காலிஸ், 2019ல் ஜோ டென்லி ஆகியோரும் இந்த தேவையற்ற சாதனையை படைத்துள்ளனர்.
துஷார் தேஷ்பாண்டே சாதனை:
ஐபிஎல் வரலாற்றில் முதல் பந்திலேயே விக்கெட் வீழ்த்திய உலகின் 24வது வீரர் என்ற சாதனை படைத்தார். அதேநேரத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக இந்த சாதனையை படைத்த மூன்றாவது வீரர் என்ற பெருமையை பெற்றார் துஷார் தேஷ்பாண்டே. இவருக்கு முன், லட்சுமிபதி பாலாஜி 2009லும், தீபக் சாஹர் 2018லும் இந்த சாதனையை படைத்திருந்தனர். அதே சமயம் ஐபிஎல் தொடரில் டர்க் நன்னஸ், மலிங்கா, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், டிரெண்ட் போல்ட் போன்ற பந்துவீச்சாளர்கள் போட்டியின் முதல் பந்திலேயே இரண்டு முறை விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர். அதேசமயம், முகமது ஷமி இதை அதிகபட்சமாக முதல் பந்தில் மூன்று முறை விக்கெட்களை வீழ்த்தியுள்ளார்.
முதல் பந்தில் விக்கெட்களை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியல்:
பேட்ஸ்மேன் | விளையாடிய அணி | ஆண்டு | எதிரணி | பந்துவீச்சாளர் |
---|---|---|---|---|
பார்த்தீவ் படேல் | சிஎஸ்கே | 2008 | ஆர்.ஆர் | சோஹைல் தன்வீர் |
கௌதம் கம்பீர் | டிசி | 2009 | சிஎஸ்கே | லட்சுமிபதி பாலாஜி |
ஜாக் காலிஸ் | ஆர்சிபி | 2009 | டிசி | டிர்க் நன்ஸ் |
பிரண்டன் மெக்கல்லம் | கே.கே.ஆர் | 2009 | ஆர்சிபி | கெவின் பீட்டர்சன் |
எஸ் பத்ரிநாத் | சிஎஸ்கே | 2009 | பி.கே.எஸ் | இர்பான் பதான் |
சனத் ஜெயசூரிய | எம்.ஐ | 2009 | டிசி | டிர்க் நன்ஸ் |
மனோஜ் திவாரி | கே.கே.ஆர் | 2010 | டெக்கான் | வௌவால் வாசனை |
மைக்கேல் ஆட்டுக்குட்டி | ஆர்.ஆர் | 2010 | கே.கே.ஆர் | அசோக் திண்டா |
மயங்க் அகர்வால் | ஆர்சிபி | 2011 | எம்.ஐ | லசித் மலிங்கா |
எஸ் அனிருத் | சிஎஸ்கே | 2011 | பி.கே.எஸ் | பிரவீன் குமார் |
பிரண்டன் மெக்கல்லம் | கே.டி.கே | 2011 | பி.டபிள்யூ. ஐ | அல்போன்சா தாமஸ் |
பார்த்தீவ் படேல் | டெக்கான் | 2012 | பி.டபிள்யூ. ஐ | மார்லன் சாமுவேல்ஸ் |
உன்முக்த் சந்த் | டிசி | 2013 | ஜிடி | பிரட் லீ |
குசல் பெரேரா | ஆர்.ஆர் | 2013 | பி.டபிள்யூ. ஐ | புவனேஷ்வர் குமார் |
ஜாக் காலிஸ் | கே.கே.ஆர் | 2014 | டிசி | முகமது ஷமி |
இவான் ஸ்மித் | சிஎஸ்கே | 2015 | கே.கே.ஆர் | பாட் கம்மின்ஸ் |
மயங்க் அகர்வால் | டிசி | 2015 | எம்.ஐ | லசித் மலிங்கா |
கிறிஸ் கெய்ல் | ஆர்சிபி | 2017 | கே.கே.ஆர் | உமேஷ் யாதவ் |
மார்ட்டின் கப்டில் | பி.கே.எஸ் | 2017 | ஆர்.பி.எஸ்.ஜி | ஜெய்தேவ் உனத்கட் |
சூர்யகுமார் யாதவ் | எம்.ஐ | 2018 | ஆர்சிபி | உமேஷ் யாதவ் |
ஷிகர் தவான் | எஸ்.ஆர்.ஹெச் | 2018 | சிஎஸ்கே | தீபக் சாஹர் |
ஜோ டான்லி | கே.கே.ஆர் | 2019 | டிசி | இஷாந்த் சர்மா |
பிருத்வி ஷா | டிசி | 2020 | ஆர்.ஆர் | ஜோஃப்ரா வில்லாளி |
மார்கஸ் ஸ்டெய்னிஸ் | டிசி | 2020 | எம்.ஐ | ட்ரெண்ட் போல்ட் |
கே எல் ராகுல் | எல்.எஸ்.ஜி | 2022 | ஜிடி | முகமது ஷமி |
விராட் கோலி | ஆர்சிபி | 2022 | எஸ்.ஆர்.ஹெச் | ஜெகதீஷ் சுசித் |
டேவிட் எச்சரிக்கை | டிசி | 2022 | பி.கே.எஸ் | லியாம் லிவிங்ஸ்டோன் |
பிரப்சிம்ரன் சிங் | பி.கே.எஸ் | 2023 | எஸ்.ஆர்.ஹெச் | புவனேஷ்வர் குமார் |
விராட் கோலி | ஆர்சிபி | 2023 | ஆர்.ஆர் | ட்ரெண்ட் போல்ட் |
பிலிப் உப்பு | டிசி | 2023 | ஜிடி | முகமது ஷமி |
பிலிப் உப்பு | கே.கே.ஆர் | 2024 | சிஎஸ்கே | துஷார் தேஷ்பாண்டே |