தென்னிந்திய சினிமாவின் ஐகான் இயக்குனர் மணிரத்னத்தின் கனவு திரைப்படமான "பொன்னியின் செல்வன் 1" திரைப்படம் செப்டம்பர் 30ம் தேதி உலகளவில் மிகவும் கோலாகலமாக வெளியாக உள்ளது. இந்த நிலையில் படக்குழுவினர் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்திற்கான விளம்பர பணிகளை மும்மரமாக தொடங்கிவிட்டார்கள். அதற்கு ஆரம்பமாக பொன்னிச்செல்வன் படத்தில் நடித்திருக்கும்  சீயான் விக்ரம் மற்றும் திரிஷா அவர்களின் கதாபாத்திரங்களின் பெரியர்களாக  தங்களின் ட்விட்டர் கணக்குகளை மாற்றியுள்ளனர். இவர்களை தொடர்ந்து நடிகர் கார்த்தி மற்றும் ஜெயம் ரவியும் தங்களின் ட்விட்டர் கணக்குகளின் பெயர்களை மாற்ற உள்ளனர்.  


 



கனவு நனவாகும் தருணம் :


இயக்குனர் மணிரத்னத்தின் பல ஆண்டு கனவாக இருந்த கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படமாக்கும் நோக்கம் இப்போது நிஜமாகி உள்ளது. இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். 5 மொழிகளில் வெளியாக இருக்கும் இப்படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30 தேதி திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் தான் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மிகவும் விமர்சையாக நடைபெற்றது. இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மானின் இசை ஒரு பெரிய பலம். மிகவும் எதிர்பார்ப்போடு இருக்கும் ரசிகர்களை  அவ்வப்போது ஏதாவது ஒரு அப்டேட் கொடுத்து இன்ப அதிர்ச்சியில் திகைக்க வைத்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது வெளியான அப்டேட்டின் படி பொன்னியின் செல்வன் படத்தின் கதாபாத்திரங்களின்  பெயர்களாக தங்களின் ட்விட்டர் கணக்குகளை மாற்றி ஒரு புதுமையான விளம்பர யுக்தியை கையாண்டுள்ளனர். இது ரசிகர்களை புல்லரிக்க செய்துள்ளது என்றால் அது மிகையல்ல.


 






 


இப்படத்தில் நடித்திருக்கும் நடிகர்கள் மற்றும் அவர்களின் கதாபாத்திரங்கள்:


நடிகர் விக்ரம்  - ஆதித்ய கரிகாலன்
நடிகர் ஜெயம்ரவி - அருள்மொழி வர்மன் 
நடிகர் கார்த்தி - வல்லவராயன் வந்தியத்தேவன்
நடிகர் பிரகாஷ்ராஜ் - சுந்தர சோழன் 
நடிகர் சரத்குமார் - பெரிய பழுவேட்டராயர் 
நடிகர் பார்த்திபன் - சின்ன பழுவேட்டராயர்
நடிகர் ஜெயராம் - அல்வார்கடியான் 
நடிகர் விக்ரம் பிரபு - பார்த்திபேந்திர பல்லவன்
நடிகர் கிஷோர் - ரவிதாசன்
நடிகை திரிஷா - குந்தவை 
நடிகை ஐஸ்வர்யா ராய்  - நந்தினி 


மற்றும் பலர் என ஒரு பெரிய திரை பட்டாளம் இப்படத்தில் நடித்துள்ளனர். ஒவ்வொருவரும் அவரவரின் கதாபத்திரங்களின் வெகு சிறப்பாக நடித்துள்ளனர். ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியத்துவம் வாய்ந்தவை. இந்த நாவல் எப்படி தலைமுறை கடந்து காலங்களை கடந்து நிலைத்து நிற்கிறதோ அதே போல இப்படமும் காலம் கடந்தும் நமது தலைமுறையினருக்கு நமது சரித்திரத்தை பற்றி எடுத்துரைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.  






 


விரைவில் தொடங்கும் பேன்- இந்திய விளம்பரம் :


கோலிவுட்டின் மிக சிறந்த படைப்பு இந்த "பொன்னியின் செல்வன்" திரைப்படம். இப்படக்குழுவினர் விரைவில் படத்தின் விளம்பரத்தை இந்தியா முழுவதிலும் செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர். நாளை முதல் 15 நாட்களுக்கு தொடர்ந்து விளம்பர பணிகளுக்காக இந்தியா முழுவதும் டூர் செல்ல திட்டமிட்டுள்ளார் PS படக்குழுவினர் என கூறப்படுகிறது ஆனால் அதிகாரப்பூரவமான அறிவிப்பு வெளியாகவில்லை.