தமிழ்நாடு:
- தமிழ்நாட்டில் 7 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
- கோவை எஸ்டிபிஐ அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது.
- அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் வீடுகளில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியது.
- அரசின் சிமெண்ட் ஆலைக்கு நிலம் வழங்கியவர்களுக்கு உடனடியாக நிலம் வழங்க வேண்டும் என்று
- எல் அண்ட் டி நிறுவனத்திற்கு சென்னை மெட்ரோ ரயில் விரிவாக்க பணி வழங்கப்பட்டுள்ளது.
- சென்னையில் 2081 ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டுள்ளதாக தகவல்.
- தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இந்தியா:
- நாடு முழுவதும் உள்ள 86 கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.
- ஆந்திராவில் ஏற்பட்ட கனமழை காரணமாக அங்கு பல்வேறு பகுதிகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- சபரிமலை கோயிலில் பக்தர்கள் தரிசனத்திற்கு முன்பதிவு செய்யும் புதிய ஆன்லைன் வசதி விரைவில் அறிமுகம்.
- குஜராத்தில் 1.5 லட்சம் கோடியில் செமிகண்டக்டர் நிறுவனம் அமைக்க உள்ளதாக தகவல்.
- பெங்களூருவில் ஆக்க்கிரமைப்பு கட்டிடங்கள் இடிக்கப்படும் என்று அமைச்சர் தகவல்.
- சைரஸ் மிஸ்ட்ரி விபத்திற்கு உள்ளான மெர்டிச்ஸ் காரை நிபுணர் குழு ஆய்வு செய்தது.
- மேற்கு வங்கத்தில் பாஜகவினர் நடத்திய போராட்டத்தில் மோதல் ஏற்பட்டது.
- தெலங்கானாவில் கிராம வருவாய் உதவியாளர்கள் மீது காவல்துறையினர் தடியடி நடுத்தினர்.
- கர்நாடகாவின் கட்டப்பிரிபா ஆற்றில் கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- திருப்பதி-திருமலை இடையே மின்சார ரயில் சேவையை முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி தொடங்கி வைக்க உள்ளார்.
- காங்கிரஸ் கட்சி காலாவதியாகிவிட்டதாக டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
உலகம்:
- இந்தியா-ஜப்பான் கடற்படை போர் பயிற்சி ஒத்திகையை நேற்று நடத்தனர்.
- அஜர்பைஜான் தாக்குதலில் ஆர்மேனியாவின் 40 வீரர்கள் பலியாகியுள்ளதாக தகவல்.
- மெக்சிகோவில் கடத்தப்பட்ட 1.7 டன் போதை பொருட்களை கப்பலில் சென்று அதிகாரிகள் மீட்டனர்.
- கென்யாவின் 5வது அதிபராக ரூட்டோ நேற்று பதவியேற்று கொண்டார்.
- ஆர்டெமிஸ் ஏவுதல் பணியை மீண்டும் நாசா தள்ளி வைத்துள்ளது.
- ராணி எலிசபெத்தின் உடல் எடின்ப்ரோவிலிருந்து லண்டன் சென்றடைந்தது.
- பக்கிங்காம் அரணமையில் இருந்து இன்று பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு ராணி எலிசபெத்தின் உடல் எடுத்து செல்லப்படுகிறது.
- வடகிழக்கு உக்ரைன் பகுதியிலிருந்து ரஷ்ய படைகள் வெளியேறியதால் மக்கள் மீண்டும் அங்கு வர தொடங்கியுள்ளனர்.
- வரும் டிசம்பர் 1 முதல் ஜி20 அமைப்புக்கு ஒராண்டு இந்தியா தலைமை பொறுப்பை ஏற்க உள்ளது.
விளையாட்டு:
- சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியில் அன்கிதா ரெய்னா நேற்று நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் ஜெர்மனி வீராங்கனையிடம் 6-0,6-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தார்.
- இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான டி20 போட்டியில் இந்திய மகளிர் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.