PS 2 Making Video: பொன்னியின் செல்வன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் சுழன்றடிக்கும் ரவிவர்மன்... லைக்ஸ் அள்ளும் வீடியோ!

ஒளிப்பதிவாளர் ரவிவர்மன்தான் சுழன்றடித்து படப்பிடிப்பு தளத்தில் பணிபுரியும் வீடியோ ஒன்றை தன் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Continues below advertisement

பொன்னியின் செல்வன் ஷூட்டிங் தளத்தில் பம்பரமாய் சுழன்றடித்து தான் பணிபுரியும் வீடியோவை ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் பதிவிட்டுள்ளார்.

Continues below advertisement

விமர்சனங்கள் தாண்டி வசூல்

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலைத் தழுவி சில மாற்றங்களுடன் மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் இரண்டாம் பாகம் ஏப்.28ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. சென்ற ஆண்டு பொன்னியின் செல்வன்  முதல் பாகம் வெளியான நிலையில், அதன் தொடர்ச்சியாக தற்போது இரண்டாம் பாகம் வெளியாகியுள்ளது.

நடிகர்கள் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, த்ரிஷா, ஜெயம்  ரவி,  சரத்குமார், பார்த்திபன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, ஷோபிதா,  பிரபு, ரஹ்மான், விக்ரம் பிரபு உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே இந்தப் படத்தில் நடித்துள்ளது.

நாவலில் உள்ள கதாபாத்திரங்கள் திரையில் அப்படியே பிரதிபலிக்காதது உள்ளிட்டவை குறித்த அதிருப்திகள், கலவையான விமர்சனங்கள் தாண்டி, படம் நல்ல வசூலைக் குவித்து வருகிறது.

வீடியோ பகிர்ந்த ரவிவர்மன்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் முதல் பாகத்தைப் போலவே இரண்டாம் பாகத்தில் பாடலும், பின்னணி இசையும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், முன்னதாக இப்படம் உலகம் முழுவதும் 200 கோடிகள் வசூலித்துள்ளதாகவும், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் வசூலை வாரிக்குவித்து வருவதாகவும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

பொன்னியின் செல்வன் முதல் பாகம் படம் வெளியான முதல் இரண்டு நாள்களில் 150 கோடிகளை வசூலித்து மாஸ் காட்டிய நிலையில், முதல் பாகத்தை இரண்டாம் பாகம் வசூல்ரீதியாக விஞ்சவில்லை எனக் கூறப்பட்டது.

தொடர்ந்து படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தில் படக்குழுவினர் உற்சாகமாக ஈடுபட்டுள்ள நிலையில், ஒளிப்பதிவாளர் ரவிவர்மன் தான் சுழன்றடித்து படப்பிடிப்பு தளத்தில் பணிபுரியும் வீடியோ ஒன்றை தன் இணையப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

க்ரீன் மேட், லைவ் லொகேஷன்கள் என அனைத்து இடத்திலும் கேமரா மற்றும் தன் குழுவினருடன் ரவிவர்மன் பணியாற்றும் இந்த வீடியோ இன்ஸ்டாவில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

 

முன்னதாக ’பொன்னியின்  செல்வன் 2’ திரைப்படத்தைப் பார்த்து பேசிய நடிகர் கமல்ஹாசன் பொன்னியின் செல்வன் தமிழ் சினிமாவின் பெருமை, தமிழரின் பெருமையைப் போற்றும் இத்தகைய படத்தை எடுக்க வேண்டும் என்பதற்கே தனி துணிச்சல் வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க: Radhika on Manobala : பல தசாப்தங்களாக தொடர்ந்த நட்பு... மனோபாலா இழப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை... ராதிகா உருக்கமான ட்வீட் !

Continues below advertisement
Sponsored Links by Taboola