PS 1 Theatre rights : சிங்கப்பூர்...மலேசியா... ஆஸ்திரேலியா... நியூசிலாந்து... எங்கும் கலக்கும் "பொன்னியின் செல்வன் "


கல்கியின் "பொன்னியின் செல்வன்" நாவலை தழுவி இயக்குனர் மணிரத்னம் இயக்கியுள்ள சரித்திர காவிய திரைப்படமான "பொன்னியின் செல்வன்" திரைப்படம் இரண்டு பாகங்களாக எடுக்கப்பட உள்ளது. அதன் முதல் பாகம் தற்போது முழுவதுமாக முடிவடைந்து வரும் செப்டம்பர் 15ம் தேதி திரையரங்குகளில் கோலாகலமாக வெளியிடப்பட உள்ளது. 


 



ஐகானின் கனவும் நினைவானது :


தமிழ் சினிமாவின் ஐகான் மணிரத்னத்தின் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில், ஏ. ஆர். ரஹ்மான் இசையில், ரவி வர்மனின் ஒளிப்பதிவில் மிகவும் பிரமாண்டமாக செதுக்கப்பட்டுள்ளது "பொன்னியின் செல்வன்" திரைப்படம். இப்படத்தின் ட்ரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா மிகவும் பிரமாண்டமாக சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்றது. 


 






 


அதிர்ஷ்டசாலிகளின் பட்டியல்:


இப்படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், விக்ரம், விக்ரம் பிரபு, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, ஜெயராம், பிரகாஷ்ராஜ், ஜெயசித்ரா, ரஹ்மான், கிஷோர் என ஒரு பெரிய திரைபட்டாளமே இப்படத்தில் நடித்தான் மூலம் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். 






 


வெளிநாடுகளில் திரையரங்க உரிமை பெற்றது யார் ?


இந்த காவிய திரைப்படத்தின் முதல் பாகம் செப்டெம்பர் 15 ம் தேதி  வெளியாக தயாராக இருக்கும் நிலையில் தற்போது படத்தை திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை யார் கைப்பற்றியுள்ளார்கள் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின்  சாட்டிலைட் உரிமையை சன் நெட்ஒர்க் நிறுவனம் கைப்பற்றியது. டிஜிட்டல் உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் 125 கோடிக்கு கைப்பற்றியுள்ளது என்பது ஏற்கனவே வெளியான தகவல். உலகளவில் இப்படம் வெளியாகவுள்ளதால் வெளிநாடுகளில் திரையரங்குகளில் வெளியிடும் உரிமையை கைப்பற்றிய விவரம் தான் புதிய அப்டேட். ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் வாசன் மூவிஸ் நிறுவனமும், மலேசியாவில் லோட்டஸ் பைவ் ஸ்டார் ஏவி நிறுவனம் மற்றும் எல்.ஃப்.எஸ்  நிறுவனமும், சிங்கப்பூரில் ஹோம் ஸ்க்ரீன் நெட் நிறுவனமும்    கைப்பற்றுள்ளது என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. லைக்கா நிறுவனம் "பொன்னியின் செல்வன் 1" படத்தினை வெளிநாடுகளில் வெளியிடுவதை பெருமையாக கருதுகிறது. இந்த அறிவிப்பு குறித்த அப்டேட் தற்போது சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. 


செப்டம்பர் 15 தமிழ் சினிமா வரலாற்றின் ஒரு பொன்னாள். தலைமுறை கடந்தும் இப்படம் நிச்சயமாக பேசப்படும். இப்படத்தின் வெளியீட்டிற்காக மிகவும் ஆர்வத்துடன் காத்து இருக்கிறார்கள் ரசிகர்கள்.