Vanangaan: ‛வணங்கான் கதை இது தான்...’ போட்டு உடைத்த ஆர்.கே.சுரேஷ்!

தமிழ் சினிமாவில் தனித்தன்மை வாய்ந்த இயக்குநர்களில் ஒருவரான பாலா அடுத்ததாக வணங்கான் படத்தை இயக்கி வருகிறார்.

Continues below advertisement

இயக்குநர் பாலாவின் வணங்கான் படம் எப்படி இருக்கும் என தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார். 

Continues below advertisement

தமிழ் சினிமாவில் தனித்தன்மை வாய்ந்த இயக்குநர்களில் ஒருவரான பாலா அடுத்ததாக வணங்கான் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தை 2டி நிறுவனம் சார்பில் நடிகர் சூர்யாவே தயாரித்து நடிக்கிறார். ஹீரோயினாக கீர்த்தி ஷெட்டி நடிக்கவுள்ள நிலையில் ஜி.வி.பிரகாஷ் படத்திற்கு இசையமைக்கிறார். 

ஏற்கனவே சூரரைப்போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்கள்,  விக்ரம் படத்தின் ரோலக்ஸ் கேரக்டரின் வெற்றியால் சூர்யாவின் அடுத்தடுத்து படங்களின் மீது பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. அவர் தற்போது இயக்குநர் வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடித்து வரும் நிலையில் பாலா படத்திலும் நடிக்கிறார். சாக்லேட் பாயாக வலம் வந்த சூர்யாவை 2001ஆம் ஆண்டு வெளியான நந்தா படத்தின் மூலம் டோட்டலாக மாற்றி காட்டினார் பாலா. அதன் தாக்கம் 2003ஆம் ஆண்டு வெளியான பிதாமகன் படத்திலும் எதிரொலித்தது. சூர்யாவுக்குள் இருக்கும் நடிப்புத் திறமையும் வெளிவந்தது. இதன்  காரணமாக  பாலா மீது சூர்யாவுக்கு எப்போதும் தனி பிரியமும், மரியாதையும் உள்ளது. 

அதன் காரணமாகவே பாலா எடுத்த அவன் -இவன் படத்தில் கெஸ்ட் ரோலில் சூர்யா நடிக்க காரணமாக அமைந்தது. இந்த நட்புறவே 18 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இயக்குநர் பாலாவுடன் கைகோர்க்க அடிப்படையாக அமைந்தது. இந்நிலையில் வணங்கான் படம் குறித்து தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே.சுரேஷ் நேர்காணல்  கருத்து தெரிவித்துள்ளார். அதில் நெறியாளர் வணங்கான் தென்மாவட்ட கதைக்களம், உங்கள் குருநாதர் பாலாவின் படம் அதனால் அந்த படத்தில் நடிக்கிறீர்களா என கேட்கிறார். 

அதற்கு ஆர்.கே.சுரேஷ், வணங்கான் படத்தின் கதை எனக்கு முழுவதுமாக தெரியும். அந்த படத்தில் 3, 4 கேரக்டர்களை மட்டுமே சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது.  ரொம்ப நல்ல கதை. சூர்யாவின் நடிப்பு பசிக்கு இக்கதை நல்ல விருந்தாக அமையும் என தெரிவித்துள்ளார். இதன் வீடியோவை சூர்யா ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகின்றனர். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

 

Continues below advertisement
Sponsored Links by Taboola