நயன்தாரா விக்னேஷ் சிவன் விவாகரத்து வதந்தி
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் ஜோடி சமூக வலைதளத்தில் பயங்கர ஆக்டிவாக இருந்து வருகிறார்கள். இதனால் அடிக்கடி இவர்களை வைத்து ஏதாவது சர்ச்சை உருவாகியபடி உள்ளது. விவாகரத்து செய்துகொள்ள இருப்பதாக சமீபத்தில் சமூக வலைதளத்தில் வதந்திகள் பரவின. இதற்கு நயன் விக்னேஷ் தரப்பு நகைச்சுவையாக ரிப்ளை கொடுத்து வாயடைத்தார்கள். அந்த வகையில் தன்னை தானே வைத்து மீம் ஒன்றை பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன்
உயிர் உலகுடன் விக்னேஷ் சிவன்
இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது மகன்களுடன் இருக்கும் புகைப்படங்கள் சமீபத்தில் மீம் மெட்டிரியலாக மாறின. தனது இரு மகன்களான உயிர் மற்றும் உலகுடன் அவர் இருக்கும் புகைப்படங்களுக்கு கீழ் ரசிகர்கள் " உயிரை கையில் பிடித்துக் கொண்டிருக்கும் விக்னேஷ் சிவன்' போன்ற கமெண்ட்களை பதிவு செய்துவந்தார்கள். அதேபோல் விஜயுடன் அவர் எடுத்துக் கொண்ட புகைப்படத்தின் கீழ் 'உயிரை கையில் பிடித்துக் கொண்டு விஜயை சந்தித்த விக்னேஷ் சிவன் ' 'விக்னேஷ் சிவனின் உயிருடன் விளையாடி விஜய்' என கமெண்ட் செய்தார்கள். இந்த மீம்களை நகைச்சுவையாக எடுத்துக்கொண்டு தற்போது தன்னை வைத்து தானே மீம் போட்டுள்ளார் விக்னேஷ் சிவன்
தன்னைதானே ட்ரோல் செய்துகொண்ட
தனது இன்ஸ்டாகிராமில் தனது மகன்களுடன் புகைப்படங்களை பதிவிட்ட விக்னேஷ் சிவன் " ஒரே கையில் உயிரையும் பிடித்துக் கொண்டு உலகத்தையும் பிடித்துக்கொண்டு சிரித்துக்கொண்டு இருக்கும் விக்னேஷ் சிவன்' என பதிவிட்டுள்ளார்.
எல்.ஐ.கே
விக்னேஷ் சிவன் தற்போது பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள எல்.ஐ.கே படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படத்தின் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. எஸ்.ஜே சூர்யா , க்ரித்தி ஷெட்டி , கெளரி கிஷன் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ரெளடி பிக்ச்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. அனிருத் இசையமைத்துள்ளார்.