டிராகன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவின் சென்ஷேனல் ஹீரோயினாக இருப்பவர் கயாடு லோஹர். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் இதயம் முரளி, சிம்பு 49ஆவதும் படத்திலும் கமிட் ஆகியுள்ளார். இதைத்தொடர்ந்து தெலுங்கு மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். இளைஞர்களை கவர்ந்த கயாடு லோஹர் தற்போது அவர் நடிக்கும் ஒரு படத்தில் இதுவரை அவர் ஏற்று நடிக்காத கதாப்பாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
ரசிகர்களை கவர்ந்த இளம் நாயகி
தெலுங்கு திரையுலகில் அல்லூரி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகம் ஆனார் கயாடு லோஹர் அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றது. தெலுங்கு சினிமா கைவிட்டாலும், மலையாளம், கன்னடம் மொழிகளில் கவனம் செலுத்த தொடங்கினார். தற்போது, தமிழ், மலையாளம் மொழிகளில் பிஸியான நடிகையாக மாறிவிட்டார். இதைத்தொடர்ந்து கல்லூரி விழா மற்றும் முக்கிய நிகழ்ச்சிகளில் சிறப்பு விருந்தினராக செல்லும் கயாடு லோஹர், நடனம் ஆடி ரசிகர்களை கவர்ந்து விடுகிறார்.
விஜய் ஃபேவரட் ஹீரோ
பூர்விகம் அசாமாக இருந்தாலும், தமிழ் பேச முயற்சிப்பதை பல பேட்டிகளில் தெரிவித்திருக்கிறார் கயாடு லோஹர். பிடித்த நடிகர், விஜய் என்றும் தெரிவித்திருக்கிறார். இருப்பினும், சிம்பு படத்தில் நடிப்பது மிகப்பெரிய கனவு என்றும் கூறியுள்ளார். அதனோடு மட்டும் இல்லாமல் சமூகவலைதளங்களில் ரீல்ஸ் வீடியோ, போட்டோ ஷூட் என ரசிகர்களை தன்வசப்படுத்திக்கொண்டே இருக்கிறார். இதனால் தான் என்னவோ பலருக்கும் கயாடு லோஹர் பீவர் பிடித்திருக்கிறது என தமாஸாக கிசுகிசுக்கின்றனர்.
பாலியல் தொழிலாளி
தென்னிந்திய மொழிகளில் டாப் ஹீரோயினாக வளர வேண்டும் என்ற முனைப்போடு இருக்கும் கயாடு லோஹர் தற்போது அழுத்தமான கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பதாக அவரே தெரிவித்திருக்கிறார். நடிகர் நானி நடிப்பில் உருவாகி வரும் பாரடைஸ் படத்தில் கயாடு லோஹரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார். அதில் அவர் பாலியல் தொழிலாளியாக நடித்திருப்பதாகவும், தெலுங்கில் இப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமையும் என்றும் இந்த கதாப்பாத்திரம் திருப்புமுனையை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்திருக்கிறார். நிச்சயம் இப்படத்தின் மூலம் தெலுங்கில் வாய்ப்புகள் கிடைக்கும் என்று நம்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.