Hybrid Cars Under 20 Lakh: இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் 20 லட்ச ரூபாய் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் ஹைப்ரிட் கார்களின் விவரங்கள் கீழே ஒப்பிடப்பட்டுள்ளன.
பட்ஜெட்டில் சிறந்த ஹைப்ரிட் கார்கள்:
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தற்போது பலரும் ஹைப்ரிட் வாகனங்களை நோக்கி நகர தொடங்கியுள்ளனர். காரணம், தற்போதும் மின்சார வாகனங்களை விரும்பாமல் எரிபொருள் சிக்கன வாகனங்களை நம்புகின்றனர். அந்த வகையில் ஹைப்ரிட் கார் மாடலானது பெட்ரோலை கொண்டு இன்ஜினில் உற்பத்தி செய்யப்பட்ட ஆற்றலையும், மின்சார மோட்டாரை கொண்டு உருவாக்கப்பட்ட ஆற்றலையும் ஒருசேர பயன்படுத்தி நல்ல மைலேஜை வழங்குகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க பகுதிகளில் பயன்படுத்த இந்த கார் சிறந்த தேர்வாக உள்ளது. அந்த வகையில் 20 லட்ச ரூபாய் பட்ஜெட்டில் நல்ல மைலேஜ், குறைந்த சுற்றுச்சூழல் மாசுபாட்டை ஏற்படுத்தும் வாகனத்தை வாங்க விரும்புவோருக்கு ஹைப்ரிட் கார் பிரதான வாய்ப்பாக இருக்கும். உங்களுக்கு ஏற்ற கார்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
1. மாருதி கிராண்ட் விட்டாரா வலுவான ஹைப்ரிட்
இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் கிடைக்கும் மிகவும் வலுவான ஹைப்ரிட் கார்களில் மாருதியின் கிராண்ட் விட்டாராவும் ஒன்று. இதில் இடம்பெற்றுள்ள 1.5 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் மற்றும் மின்சார பெட்ரோல் மூலம், லிட்டருக்கு 27.97 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பயணிகளை கவரும் விதமாக பனோரமிக் சன்ரூஃப், 360 டிகிரி கேமரா, மிகவும் நவீனமான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் பாதுகாப்பிற்காக 6 ஏர் பேக்குகள் ஆகிய அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளன. கிராண்ட் விட்டாராவின் மைல்ட் ஹைப்ரிட் எடிஷனின் விலை ரூ.12.5 லட்சத்தில் தொடங்கி, வலுவான் ஹைப்ரிட் எடிஷனின் விலை 18 லட்சம் ரூபாய் வரை நீள்கிறது. வலுவான பாதுகாப்பு அம்சங்களால் இந்த கார் பாதுகாப்பு பரிசோதனையில் 4 அல்லது 5 ஸ்டார்களை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
2. டொயோட்டா அர்பன் க்ரூசர் ஹைரைடர்
ஹைரைடரின் அடிப்படை கட்டமைப்பானது கிராண்ட் விட்டாராவுடன் பகிரப்பட்டுள்ளது. அதன் ஹைப்ரிட் அமைப்பும் அதனையே பின்பற்றுகிறது. கவனத்தை ஈர்க்கும் விதமாக இந்த காரும் லிட்டருக்கு 28 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்குகிறது. டொயோட்டாவின் ஹைப்ரிட்டுடன் கூடிய ஏராளமான அனுபவத்துடன், இந்த SUV மிகவும் சீரான, ஒழுக்கமான சவாரி தரம் மற்றும் அதன் செயல்திறன் தொடர்பான நம்பகத்தன்மையை கொண்டுள்ளது. ஸ்ட்ராங் ஹைப்ரிட் வேரியண்ட்களின் விலை தோராயமாக ரூ.17.5 லட்சத்தில் தொடங்குகின்றன. அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களை கொண்டு, பாதுகாப்பு பரிசோதனையில் பெரியவர்களுக்கு 4 ஸ்டார்களையும், குழந்தைகளுக்கு 3 ஸ்டார்களையும் பெற்றுள்ளது.
3. ஹோண்டா சிட்டி e:HEV
செடான் கார் மாடல் விரும்பிகளுக்கு ஹோண்டா சிட்டியின் ஹைப்ரிட் எடிஷன் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இதில் மின்சார மோட்டாருடன் 1.5லிட்டர் பெட்ரோல் இன்ஜின் இடம்பெற்றுள்ளது. அதன்மூலம் லிட்டருக்கு 25 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கதோடு, ஒரு ப்ரீமியம் பயண அனுபவத்தையும் வழங்குகிறது. டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் கிளஸ்டர், சுயமாக சார்ஜ் செய்து கொள்ளும் ஹைப்ரிட் சிஸ்டம் கனெக்டட் கார் டெக்னாலஜி என ஏராளமான தொழில்நுட்ப அம்சங்களை கொண்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட ADAS தொழில்நுட்பம் போன்ற பாதுகாப்பு அம்சங்களை கொண்டு பாதுகாப்பு பரிசோதனையில் 5 ஸ்டார்களை பெற்று கவனத்தை ஈர்த்துள்ளது. இதன் விலை ரூ.18 லட்சத்தில் தொடங்குகிறது.
4. மாருதி பலேனோ சிஎன்ஜி
லேசான ஹைப்ரிட் அம்சங்களுடன் விரைவில் சந்தைப்படுத்தப்பட உள்ளதாக கூறப்படும், கிளான்ஸா மற்றும் பலேனோ கார்கள் செயல்திறனில் அசத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே மிகவும் மலிவு விலை ஹேட்ச்பேக்குகளில் ஒன்றான இவை, 2025 ஆம் ஆண்டில் ஹைப்ரிட் அப்கிரேடை பெறுவதன் மூலம் லிட்டருக்கு 30 கிலோ மீட்டர் மைலேஜ் அளிக்கக் கூடும் என கூறப்படுகிறது. விலையும் மேற்குறிப்பிடப்பட்ட மற்ற 3 மாடல்களை காட்டிலும் குறைவானதாகவே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
Car loan Information:
Calculate Car Loan EMI