தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையான திரிஷாவிற்கு நடிப்புன்னா என்னான்னு தெரியல எனவும், படங்களுக்கான ப்ரோமோஷனுக்கு அழைத்தாலும் வரமுடியாது என திமிருடன் பதிலளிக்கிறார் என தயாரிப்பாளர் கே.ராஜன் தெரிவித்துள்ள கருத்து கோலிவுட்டில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
மிஸ் சென்னையாக கடந்த 1999-ஆம் ஆண்டு முதல் தமிழகத்தில் அறிமுகமான திரிஷா, பிரசாந்த் மற்றும் சிம்ரன் நடிப்பில் வெளியான ஜோடி படத்தில் நாயகிக்குத் தோழியாக நடித்திருந்தார். ஆனால் அந்நேரத்தில் அவர் தான் திரிஷா என்பதே யாருக்குமே தெரியவில்லை. பின்னர் சூர்யாவின் மௌனம் பேசியதே படத்தின் மூலம் ரசிகர்களைத் தன் பக்கம் ஈர்த்தார் திரிஷா. தொடர்ந்து விக்ரமுடன் இணைந்து நடித்த சாமி திரைப்படம் திரிஷாவிற்கு மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்தது. பின்னர் ரஜினிகாந்த், அஜித், விஜய் சேதுபதி,தனுஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஜோடியாக நடித்துள்ள திரிஷாவிற்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. மேலும் 96 திரைப்படத்தின் ஜானுவாக வலம் வந்த கதாபாத்திரம் மேலும் பல பாராட்டுக்களை திரிஷாவுக்கு பெற்று தந்தது. தற்போது இளைஞர்கள் பலரின் கனவு கன்னியாகவும் வலம் வருபவர்தான் திரிஷா.
கொரோனா காலக்கட்டத்தில் திரையரங்குகள் அனைத்தும் மூடப்பட்ட நிலையில், திரிஷா நடித்த திரைப்படம் ஒன்று ஓடிடியில் வெளியானது. ஆனால் மற்ற படங்களைப்போன்று வெற்றியைப்பெறவில்லை என்று தான் கூறவேண்டும். தற்போது இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் மிகப்பிரம்மாண்டமாகவும் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. மேலும் கர்ஜனை, ராங்கி, சதுரங்க வேட்டை உள்ளிட்ட படங்களில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். தொடர்ந்து தன்னுடைய திறமையின் வெற்றி வாகைச்சூடி வரும் த்ரிஷாவைப்பற்றி பிரபல தயாரிப்பாளராக கே.ராஜன் விமர்சித்த கருத்து கோலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.
தயாரிப்பாளர் கே.ராஜன் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டியளித்த அவர், நடிகை திரிஷா அவர் நடித்த படங்களின் ப்ரோமோஷன்களுக்கு வரமறுப்பதால் தயாரிப்பாளர்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள் என்று கூறியுள்ளார். இதோடு மட்டுமில்லாமல் நடிகை திரிஷா மிகவும் திமிர் பிடித்தவர் என்றும், 20 ஆண்டுகள் திரையுலகில் இருந்தாலும் இன்னும் கூட தனது நடிப்புத்திறனை எந்த வகையிலும் அவர் வளர்த்துக் கொள்ளவில்லை என்றாலும் அவரின் சம்பளம் மட்டும் ஏறிக்கொண்டே போகிறது என கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதோடு அவர் நடித்த படங்களின் விளம்பரத்திற்காக நடிக்க வருமாறு தயாரிப்பாளர் சங்கம் வாயிலாக அழைப்பு விடுத்தால், திரிஷாவின் தாயார் எங்களை மிரட்டுகிறார் என குற்றம் சாட்டியுள்ளார். மேலும், எங்களால் உங்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்க முடியாது என்று அடாவடியாக பதில் சொல்கிறார் திரிஷாவின் தாயார் எனவும், சில நேரங்களில் நடிகை திரிஷா ஒப்புக் கொண்டாலும் அவரின் குடும்பத்தினர் தயாரிப்பாளர்களுக்கு ஒத்துழைப்புத் தர மறுக்கிறார்கள் என தெரிவித்துள்ளார். இது பரபரப்பையும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.