நடிகர் அஜித்தை போல் அதிர்ஷ்டகார ஹீரோ யாரும் இல்லை என தயாரிப்பாளர் கே. ராஜன் விமர்சித்துள்ளார். 


அஜித் மீது விமர்சனம்:


மனதில் பட்டத்தை வெளிப்படையாக கூறும் சுபாவம் கொண்ட தயாரிப்பாளர் ராஜன், நடிகர்கள், சினிமா பிரபலங்களின் தவறுகளை மேடையிலேயே சுட்டிக்காட்டி வருகிறார். அந்த வகையில் நடிகர் அஜித் குமார், திரைப்படங்களின் நிகழ்ச்சிகளையும், ரசிகர்களை சந்திப்பதை மறுப்பதை விமர்சனமாக முன் வைத்துள்ளார்.  


அண்மையில் தில்லு இருந்தா போராடு என்ற படத்தில் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற ராஜன் அஜித் குறித்து பேசியுள்ளார். அதாவது, “ அஜித்தை போல் அதிர்ஷ்டக்கார ஹீரோ யாரும் இல்லை. அஜித் அப்பா, அம்மா என்ன தவம் செய்தார்களோ தெரியவில்லை. அவர் திடீரென ரசிகர் மன்றத்தை கலைத்து விடுவார். ரசிகர்கள் மற்றும் பொதுமக்களை சந்திக்கமாட்டார். முதலமைச்சருக்கு பாராட்டு விழா வைத்தால் வரமாட்டார். அப்படி வந்தாலும், தன்னை கட்டாயப்படுத்தி அழைத்ததாக எல்லார் முன்பும் கூறுவார். 


'தி.மு.க. அரசை ஆதரிக்கிறேன். ஆனால்..'


ஆனாலும், அவரை ரசிகர்கள் ரூ.500, ரூ.1000 டிக்கெட்டுகள் கொடுத்து ஆதரிக்கின்றனர். அஜித்துக்கு நல்ல மனசு இருக்கு. ஆனால், அவர் மீது உயிரையே வைத்து கொண்டிருக்கும் ரசிகர்களை சந்தித்து போட்டோ எடுக்க வேண்டாமா....? அஜித் உடன் போட்டோ எடுக்க வேண்டும் என சினிமாவுக்கு வந்த நபர் தில்லு இருந்தா போராடு படத்தில் நுழைந்து விட்டார். சினிமாவை எடுக்கும் ஆளுங்க போயிட்டே இருக்கிறார்கள்.  ஆனால், சினிமாவை காப்பாற்ற புதுசு புதுசாக ஆளுங்க வந்து கொண்டிருக்கிறார்கள்” என பேசியுள்ளார். 


மேலும், “மனிதனாக இருந்தால் தவறுகளை கண்டு போராட வேண்டும். தவறுகளை சுட்டிக்காட்ட வேண்டும். திமுக அரசை ஆதரிக்கிறேன். ஆனால், அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளை எதிர்க்கிறேன். அதனால் பல லட்சம் குடும்பங்கள் அழிகிறது. அரசு பல நல்ல திட்டங்களை கொண்டு வந்தாலும், டாஸ்மாக்கால் குடும்பமே அழிகிறது. புருஷன் உழைப்பை டாஸ்மாக்கில் வாங்கி விட்டு, பெண்களுக்கு ரூ.1000 கொடுப்பதில் என்ன இருக்கிறது” என்றார். 


துணிவு படத்திற்கு பிறகு உலகம் முழுவதும் பைக் சுற்றுப்பயணத்தில் இருந்த அஜித் அண்மையில் ஓமனில் இருந்து சென்னை திரும்பினார். இதனால், மகிழ் திருமேனி இயக்க இருக்கும் விடா முயற்சியின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது ரசிகர் மன்றத்தை கலைத்த அஜித், தன்னை தல என்று அழைக்க கூடாது என்றும், அஜித் குமார் அல்லது ஏகே என அழைத்தால் போதும் என ரசிகர்களுக்கு அறிக்கை மூலம் அறிவுறுத்தி இருந்தார். சினிமா தொடர்பான நிகழ்வுகள் எப்பொழுதும் ஒதுங்கியே இருப்பதால் அஜித்தை ராஜன் விமர்சித்துள்ளார். 


மேலும் படிக்க: Arya - Sayyeshaa Daughter: ஸ்கூலுக்கு போறேனே... முதல் நாள் பள்ளி சென்ற மகள்... ஆர்யா - சாயிஷா உணர்ச்சிகர பதிவு!


Simbu New Look: 'சேகுவேரா கெட்டப்பில் சிலம்பரசன்’ .. இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்.. பின்னணி என்ன?