போர்க்களமாக மாறிய ரஜினி விஜய் ரசிகர் மோதல்


ரஜினிகாந்த் நடித்த வேட்டையன் திரைப்படம் கடந்த அக்டோபர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. விமர்சன ரீதியாக படம் பாசிட்டிவான மதிப்பீடுகளை பெற்றிருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் இப்படம் பற்றி தவறான செய்திகள் திட்டமிட்டு பரப்பப்பட்டு வருகின்றன. குறிப்பாக விஜய் ரசிகர்கள் படம் வெளியான நாள் முதல்  நெகட்டிவ் விமர்சனங்களை சமூக வலைதளங்களில் பரப்பி வருகிறார்கள். படம் நன்றாக இல்லை, திரையரங்கில் கூட்டமில்லைம், வசூல் இல்லை என ஏராளமான வதந்திகள் எக்ஸ் தளத்தில் உலா வருகின்றன. இதனால் கடுப்பான ரஜினி ரசிகர்கள் விஜய் ரசிகர்களை திருப்பி தாக்கத் தொடங்கியுள்ளார்கள். 2026 ஆம் ஆண்டு விஜய் டெபாசிட் கூட இல்லாமல் ஓடப்போகிறார் என்கிற மாதிரியான கருத்துக்களை ரஜினி ரசிகர்கள் பதிவிட்டு வருகிறார்கள். தற்போதை சூழலில் சமூக வலைதளம் விஜய் மற்றும் அஜித் ரசிகர்களுக்கு இடையிலான போர்க்களமாக காட்சியளிக்கிறது. இந்த  நிலைமையில் விஜய் ரசிகர்கள் ரஜினி ரசிகர்களை தாக்க பெரிய ஆயுதமாக அமைந்துள்ளது கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவின் கருத்து. 


ஸ்டார்கள் இருந்து என்ன ஓப்பனிங் இல்லையே






சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் அக்டோபர் 10 வெளியாக இருந்தது. ரஜினியின் வேட்டையன் படம் வெளியாவதால் கங்குவா படத்தின் ரிலீஸ் நவம்பர் 14 ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது. இதனால் சூர்யா மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையில் சமூக வலைதளங்களில் மோதல் ஏற்பட்டது. கங்குவா படத்தின் தயாரிப்பாளர் சமூக வலைதளத்தில் உரையாடல் ஒன்றில் பேசிய கருத்து தற்போது வைரலாகி வருகிறது. கங்குவா படத்தின் காஸ்ட் & க்ரூ பற்றிய எந்த அப்டேட்டும் வெளியாகவில்லையே என்று ஒருவரின் கேள்விக்கு ஞானவேல்ராஜா பதிலளித்தார். " பெரிய பெரிய நடிகர்களை படத்தில் போட்டு படக்குழுவினர அறிவிச்சாங்க...எல்லாம் போட்டும் படத்துக்கு ஓப்பனிங் வரல" என அவர் தெரிவித்தார். வேட்டையன் படத்தை குறிப்பிட்டு தான் ஞானவேல் ராஜா பேசியதாக விஜய் ரசிகர்கள் பரப்பி வருகிறார்கள். ஞானவேல் ராஜாவே ஒரு பெரிய ரஜினி ரசிகர் தான் என்பது குறிப்பிடத் தக்கது.