இந்திய சினிமாவின் பழம்பெரும் நடிகை  ஸ்ரீதேவி. தமிழ் சினிமா ரசிகர்களின் கனவுக்கன்னியாகவும் வலம் வந்தார்.  கடந்த 2018ஆம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. உறவினரின் திருமணத்திற்காக துபாய் சென்றபோது  ஸ்ரீதேவி உயிரிழந்தார். தற்போது அவரது மகள்களான ஜான்வி கபூர், குஷி கபூர் ஆகிய இருவரும் சினிமாவில் ஜொலிக்க தொடங்கிவிட்டனர். ஜான்வி கபூர் தென்னிந்திய படங்களிலும் நடிக்க தொடங்கியுள்ளார். அம்மாவின் இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருக்கிறார். 

Continues below advertisement

பாகுபலி தயாரிப்பாளர் மீது குற்றச்சாட்டு

இந்நிலையில்,  ஸ்ரீதேவியின் கணவரான போனி கபூர் சமீபத்தில் அளித்த பேட்டியில் பாகுபலி பட தயாரிப்பாளர்கள் குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமெளலிக்கு  ஸ்ரீதேவியை நடிக்க வைப்பதில் ஆர்வம் காட்டினார். ஆனால், அப்படத்தின் தயாரிப்பாளர்கள் சம்பள பிரச்னையை கூறி நாடகமாடியுள்ளனர் என்று குற்றச்சாட்டு வைத்தார். இதனிடையே மாம் படத்தில்  ஸ்ரீதேவி நடித்த போது நடந்த சுவாரஸ்யமான அனுபவத்தை போனி கபூர் பகிர்ந்திருக்கிறார். மாம் படத்தில் நடித்த போது ஸ்ரீதேவிக்காக நாங்கள் ஒரு சம்பளத்தை பிக்ஸ் பண்ணி வைத்திருந்தோம். ஆனால், குறைந்த சம்பளத்தை பெற்றுக்கொண்டு மீதி சம்பளத்தை இசையமைப்பாளர் ரஹ்மானுக்கு கொடுக்க சொன்னார். நான் மிகவும் ஆச்சர்யமடைந்தேன். 

ஸ்ரீதேவி என்னை அனுமதிக்கவில்லை

அவளை பற்றி புரிந்துகொள்ளும் நேரம் நிறைய கிடைத்தது. மாம் படத்திற்காக உத்திரபிரதேசத்தின் நொய்டா,  பின் ஜார்ஜியாவில் சூட்டிங் நடைபெற்றது. அந்த சமயத்தில் என்னை அவருடைய அறையில் அனுமதிக்கவில்லை. ஏன் என்னை விட்டு விலகி செல்கிறாய் என்று கேட்டேன். நான் இப்போது மாம் படத்தின் கதாப்பாத்திரத்திற்காக தயாராகி வருகிறேன். நான் இப்போது ஒரு அம்மாவாக இந்த அறையில் இருக்க விரும்புகிறேன். அதனால் தான் உங்களை அறையில் அனுமதிக்கவில்லை என ஸ்ரீதேவி என்னிடம் தெரிவித்தாள். அந்த அளவிற்கு அந்த கதாப்பாத்திரமாக மாறக்கூடிய பெண்ணாக இருந்ததால் தான் மாம் படம் சிறப்பாக வந்தது என போனி கபூர் தெரிவித்தார்.

Continues below advertisement