உலகளவிலான ஸ்பை திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இணைய தொடரான 'சிட்டாடல்' இணைய தொடரின் குளோபல் பிரீமியர் நிகழ்ச்சி லண்டனில் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற்றது. ருஸ்ஸோ பிரதர்ஸ் மற்றும் ஷோ ரன்னர் டேவிட் வெயில் இணைந்து தயாரித்துள்ள இந்த பிரமாண்டமான இணைய தொடர் ஏப்ரல் 28-ஆம் தேதி பிரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது.


இந்த உலகளாவிய பிரீமியர் நிகழ்ச்சியில் 'டெஸி கேர்ள்' பிரியங்கா சோப்ரா, ரிச்சர்ட் மேடன், சமந்தா ரூத் பிரபு, வருண் தவான் மற்றும் பல பிரபலங்களும் கலந்து கொண்டனர்.


ஹாலிவுட்டில் கலக்கும் பிரியங்கா:


பிரியங்கா சோப்ராவை பொறுத்தவரையில் இது அவர் ஹாலிவுட்டில் நடிக்கும் இரண்டாவது இணைய தொடர். குவாண்டிகோ மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். அந்த தொடரை போலவே சிட்டேடல் தொடரும் மூன்று சீசன்களை கொண்டுள்ளது. ஒரே நேரத்தில் ஸ்பின்-ஆஃப் செய்யப்படுகிறது. அதில் ஒன்று இந்தியாவில் இருக்கும். இந்திய சீசனில் முன்னணி கதாபாத்திரத்தில் சமந்தா மற்றும் வருண் தவான் நடிக்கிறார்கள். அவர்களும் லண்டனில் நடைபெற்ற சிட்டாடல் பிரீமியர் ஷோவில் கலந்து கொண்டனர்.



ஹாட்டாக தோற்றமளித்த பிரியங்கா சோப்ரா :


பிரியங்கா சோப்ரா, சிவப்பு நிற ஆஃப்-தி ஷோல்டர் கவுனில் ஸ்டன்னிங் ஹாட் லுக்கில் அனைவரையும் அசர வைத்தார். ரிச்சர்ட் மேடன் உடன் இணைந்து அவரை ஒன்றாக பார்ப்பதற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். இருவரும் சேர்ந்து அழகாக போஸ் கொடுத்தனர். இந்த நிகழ்ச்சியில் நிக் ஜோனஸும் கலந்து கொண்டார். பிரியங்கா  சோப்ரா - நிக் ஜோனாஸ் ஜோடி தவிர்க்கமுடியாத ஒரு ஜோடி. இருவரின் கெமிஸ்ட்ரி ரெட் கார்பெட்டில் அசத்தலாக இருந்தது. 



ட்வின்னிங் செய்த வருண் தவான் - சமந்தா ஜோடி :


சிட்டாடல் பிரீமியரில் கலந்து கொண்ட வருண் தவான், சமந்தா ரூத் பிரபு ஜோடி கருப்பு நிற கோ-ஆர்ட் உடையில் அசத்தலாக காட்சியளித்தனர். சமந்தா டைட்டான உடையில் தனது மெலிந்த உருவத்தை வெளிப்படுத்தி இருந்தார். மேலும் அழகுக்கு அழகு சேர்க்கும் வகையில் பல்கேரி நெக்பீஸ் மற்றும் பிரேஸ்லெட் அணிந்து இருந்தார். மறுபுறம், வருண் ஒரு சீ-த்ரூ டி-ஷர்ட் மற்றும் பம்பர் ஜாக்கெட்டுடன் காணப்பட்டார்.