பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த நடிகை பிரியங்கா சோப்ரா ஹாலிவுட் பக்கம் முழுவதுமாக ஆர்வம் செலுத்தி வருவதற்கான காரணத்தை வெளிப்படையாக உடைத்துள்ளார்.
ஹாலிவுட் பிரவேசம் :
தமிழில் 'தமிழன்' திரைப்படத்தில் நடிகர் விஜய் ஜோடியாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா அதற்கு பின்னர் முழுவதுமாக பாலிவுட் திரைப்படங்களில் கவனம் செலுத்தி வந்தார். 2015ம் ஆண்டு குவாண்டிகோ என்ற தொலைக்காட்சி தொடர் மூலம் ஹாலிவுட் இண்டஸ்ட்ரியில் நுழைந்தார். அதற்கு முன்னரே இசை ஆல்பங்கள் மூலம் சர்வதேச இசைக் கலைஞராக மாற முயற்சித்தார்.'இன் மை சிட்டி' மற்றும் 'எக்ஸோடிக்' போன்ற பாடல்கள் மூலம் தனது பாடும் திறமையையும் வெளிப்படுத்த முயற்சித்தார்.
சரியான ராப்போ இல்லை :
பாலிவுட் முன்னணி நடிகையாக இருந்தவர் தற்போது ஹாலிவுட் பக்கம் திரும்பிய காரணம் குறித்து முதல் முறையாக மனம் திறந்துள்ளார். பாலிவுட் திரையுலகில் அவர் ஒதுக்கப்பட்டதாக உணர்ந்ததை பற்றி பகிர்ந்தார். மேலும் இண்டஸ்ட்ரியில் இருந்த பலருடன் சரியான ராப்போ இல்லாதது போல உணர்ந்ததாக தெரிவித்துள்ளார். அங்கு வாய்ப்புகள் கொடுக்க யாரும் முன்வரவில்லை. ஒத்துழைப்பு இல்லாமல் அங்கு வேலை செய்ய எனக்கு விருப்பமில்லை.
கேவலமான பாலிடிக்ஸ் நிறைந்த இடத்தில இருக்க விரும்பவில்லை. பாலிவுட்டில் இருந்து விலக தகுந்த நேரத்தை எதிர்பார்த்து காத்து கொண்டு இருந்தேன். அந்த சமயத்தில் என்னை அதில் இருந்து மீள எனக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கவே அதை நான் பயன்படுத்திக்கொண்டேன். எனது மியூசிக் வீடியோவை பார்த்து அதன் மூலம் அமெரிக்காவில் எனக்கு மிகவும் பிடித்த இசையில் எனது கேரியரை தொடர்வதற்கான வாய்ப்பு கிடைத்தது. இதன் மூலம் உலகத்தின் வேறு ஒரு மூளைக்கு என்னால் செல்ல முடிந்தது. எனக்கு வாய்ப்பு கொடுக்க தயங்கிய சினிமா எனக்கு தேவையில்லை என முடிவு செய்தேன்.
பாலிவுட் ரீ என்ட்ரி :
ஒரு சமயத்தில் இந்திய சினிமாவில் நான் நடிக்க கூடாது என்பதற்காக பல பேர் பல தடங்கல்களை கொடுத்தனர் என்றார். தற்போது பிரியங்கா சோப்ரா, ருஸ்ஸோ பிரதர்ஸின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தொடரான சிட்டாடலின் ரிலீஸ்காக ஆவலுடன் காத்துகொண்டு இருக்கிறார். இதில் ரிச்சர்ட் மேடனுடன் சேர்ந்து உளவாளியாக நடித்துள்ளார் பிரியங்கா சோப்ரா.
இந்த தொடர் பிரைம் வீடியோவில் ஏப்ரல் 28ம் தேதி முதல் ஸ்ட்ரீம் செய்யப்படும். அடுத்ததாக நடிகர் ஃபர்ஹான் அக்தர் இயக்கத்தில் உருவாகும் 'ஜீ லெ ஜாரா' திரைப்படத்தில் ஆலியா பட் மற்றும் கத்ரீனா கைஃப் ஆகியோருடன் இணைந்து நடிப்பதன் மூலம் பாலிவுட்டில் ரீ என்ட்ரி கொடுக்கிறார் பிரியங்கா சோப்ரா.