2000 வது ஆண்டு பிரபஞ்ச அழகி பட்டத்தை கைப்பற்றினார் லாரா தத்தா. அதன் பிறகு கிட்டத்தட்ட 21 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியாவை சேர்ந்த அழகி ஒருவருக்கு பிரபஞ்ச அழகி என்ற பட்டம் கிடைத்துள்ளது.சண்டிகரை சேர்ந்த ஹர்னாஸ் ஹர்னாஸ் கவுர் சாந்து(21) இந்த ஆண்டுக்கான பிரபஞ்சி அழகி பட்டத்தை கைப்பற்றியுள்ளார். அவருக்கு முன்னாள் பிரபஞ்ச அழகியான மெக்சிகோவை சேர்ந்த ஆண்ட்ரியா மெசா வாகையை சூட்டினார். பட்டம் வென்ற ஹார்னஸ் "எல்லாவற்றிலும் எனக்கு வழிகாட்டி மற்றும் ஆதரவளித்த என் பெற்றோர் மற்றும் மிஸ் இந்தியா அமைப்புக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். எனக்காக கிரீடத்தைப் பெற்றுத் தர வேண்டும் என்று பிரார்த்தனை செய்த அனைவருக்கும் அன்பு செலுத்துகிறேன். இந்தியாவுக்கு 21 ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரும் பெருமையான தருணம் இது “ என குறிப்பிட்டுள்ளார். ஹார்னஸ் கடந்த 2017ஆம் ஆண்டு மிஸ் சண்டிகர் பட்டத்தையும் 2019ஆம் ஆண்டு மிஸ் பஞ்சாப் பட்டத்தையும், 2021ல் இந்திய பிரபஞ்ச அழகி பட்டத்தையும் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் பங்கேற்றனர். நீச்சலுடை மாலை நேர உடை என உடைகளுக்கான போட்டிகள் நடத்தப்பட்டாலும், பிரபஞ்ச அழகி பட்டத்துக்கு பெண்களின் ஆளுமைத் திறன், தன்னம்பிக்கை அதிகளவு சோதிக்கப்படுகிறது. தற்போது பட்டம் வென்றஹார்னஸ் கவுர் சாந்துவிற்கு பல்வேறு தரப்புகளில் இருந்தும் வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. குறிப்பாக கடந்த 2000 ஆம் ஆண்டு இறுதியாக மிஸ்.யூனிவர்ஸ் பட்டத்தை வென்ற லாரா தத்தா ட்விட்டர் பக்கக்த்தில் கவுர் சாந்துவை வாழ்த்தி வரவேற்றுள்ளார். அதில் “ வாழ்த்துக்கள் ஹார்னஸ் கவுர் சாந்து..கிளப்பிற்கு உங்களை வரவேற்கிறோம். இதற்காக 21 வருடங்கள் காத்திருந்தோம்!!! நீங்கள் எங்களை மிகவும் பெருமைப்படுத்துகிறீர்கள்!!! மிகப்பெரிய கனவு இன்று நினைவாகியுள்ளது “ என குறிப்பிட்டுள்ளார்.
இதே போல நடிகை பிரியங்கா சோப்ராவும் “ புதிய பிரபஞ்ச அழகி ஒரு....மிஸ்.இந்தியா....வாழ்த்துக்கள் ஹார்னஸ் கவுர் சாந்து ..21 வருடங்களுக்கு பிறகு மகுடத்தை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்திருக்கிறீர்கள் “ என பெருமையுடன் தெரிவித்துள்ளார்.