மருத்துவ உலகமும், விஞ்ஞானமும் தற்போது எட்ட முடியாத வளர்ச்சியை அடைந்துள்ளது. அப்படி அதன் வளர்ச்சியை அனுபவிப்பவர்கள் அதிர்ஷ்டசாலிகள். அதில் ஒருவர் தான் நடிகை பிரியங்கா சோப்ரா.
உலகளவில் மிகவும் பிரபலமான நடிகையாக திகழ்பவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இவர் நிக்கி ஜோன்ஸ் என்ற வெளிநாட்டவரை திருமணம் செய்து கொண்டு 2022ம் ஆண்டு வாடகை தாய் மூலம் அழகான குழந்தை ஒன்றை பெற்றெடுத்தார். அந்த குழந்தையின் முகத்தை சமீபத்தில் தான் சோசியல் மீடியா மூலம் வெளியிட்டார்கள் பிரியங்கா சோப்ரா - நிக் ஜோனஸ் தம்பதி.
கரு முட்டை அவசியம் :
இது குறித்து நடிகை பிரியங்கா சோப்ரா கூறுகையில் " மகப்பேறு மருத்துவரான எனது தாய் மது சோப்ராவின் தூண்டுதலால் 30 வயதிலேயே எனது கரு முட்டைகளை உறைநிலையில் வைத்திருந்தேன். முட்டை உறைதல் முறை ஓசைட் கிரையோபிரெசர்வேஷன் என்று அழைக்கப்படுகிறது. இளம் பெண்களை விடவும் வயதில் மூத்த பெண்களுக்கு கருத்தரிப்பது என்பது மிகவும் சவாலான ஒரு விஷயமாக மாறி வருகிறது. கரு முட்டையை உறைய வைப்பதன் மூலம் பிற்காலத்தில் பெண்கள் கவலையின்றி குழந்தையை பெற முடிகிறது. புதிய முட்டைகளைப் போல உறைந்த முட்டைகள் வெற்றிகரமாக இல்லை என்றாலும் அது கருத்தரிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.
திருமணத்திற்கு பிறகு வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றது குறித்து ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. ஆனால் அந்த யோசனை என்பதை நிக்கை சந்திப்பதற்கு முன்னரே நிகழ்ந்துள்ளது. மேலும் சினிமா துறையில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்ற காரணத்தாலும் குழந்தை பெற்று கொள்ள தகுந்த ஒரு நபரை அந்த சமயத்தில் சந்திக்காததால் அந்த முடிவை எடுத்ததாக கூறியுள்ளார்.
நிக் 25 வயதிலேயே குழந்தை பெற்று கொள்ள வேண்டுமா என்ற எண்ணம் இருந்ததால் நாங்கள் அப்போது பெற்று கொள்ளவில்லை. எனக்கு குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். அவர்களுடன் அதிக நேரம் செலவு செய்ய விரும்புவேன் என்றார் பிரியங்கா சோப்ரா.
மேலும் பிரியங்கா சோப்ரா போலவே ஒரு சில பிரபலங்களும் அவர்களின் கருமுட்டைகளை உறைய வைத்துள்ளனர்.
நடிகை தனிஷா முகர்ஜி :
தனிஷா முகர்ஜி தனது 33 வயதில் முட்டைகளை உறைய வைக்க எண்ணி மருத்துவரை அணுகியுள்ளார். ஆனால் அந்த சமயத்தில் மருத்துவர் அதை செய்ய விடாமல் தடுத்ததால் 39 வயதில் முட்டைகளை உறைய வைத்தார்.
ஏக்தா கபூர் :
ஏக்தா கபூர் தனது முதல் குழந்தையான மகன் ரவி கபூரை வாடகைத் தாய் மூலம் 2019ல் பெற்றெடுத்தார். தனது 36 வயதில் முட்டையை உறையவைக்க முடிவெடுத்தார்.
ராக்கி சாவந்த் :
பிக் பாஸ் 14 மூலம் பிரபலமானவர் ராக்கி சாவந்த். இவர் தனது கருமுட்டைகளை உறைய வைத்துள்ளதாக தெரிவித்துள்ளார். "தாய்மை உணர்வை அனுபவிக்க விரும்புகிறேன். என் குழந்தைக்கு ஒரு டோனர் தேவையில்லை ஒரு தந்தைதான் தேவை. அது எப்போது நடக்கும் என தெரியவில்லை. அது நடக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன். அதற்கு எனது கரு முட்டையை உறை நிலையில் வைத்திருப்பது தான் சரியான முடிவு என அதை நான் தேர்ந்து எடுத்தேன் என தெரிவித்துள்ளார்.
டயானா ஹைடன் :
முன்னாள் உலக அழகி டயானா ஹைடன் தனது முட்டைகளை உறைய வைத்துள்ளார். அவர் மூன்று குழந்தைகளைப் பெற்றெடுத்தார். 2016ல் முதல் குழந்தையும், 2018ல் இரட்டை குழந்தைகளையும் பெற்றெடுத்தார்.
மோனா சிங்:
3 இடியட்ஸ் நடிகை மோனா சிங் தனது 34 வயதில் முட்டைகளை உறைய வைத்தார். தற்போது எனக்கு திருமணம் முடிந்துவிட்டதால் எனது கணவருடன் உலகம் முழுவதும் பயணம் செல்ல விரும்புகிறேன் என்றுள்ளார்.
ரித்திமா பண்டிட்:
செப்டம்பர் 2022ல் தான் தனது முட்டைகளை உரிய வைத்ததாக ரித்திமா பண்டிட் சமீபத்தில் தெரிவித்துள்ளார். அந்த செயல்முறையில் மருத்துவர்கள் தனது உறுதுணையாக இருந்ததாகவும், இனி குழந்தை பெற்று கொள்ள திருமணம் அவசியம் என்ற அழுத்தத்தை அவர் உணரவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.