நாள்: 02.04.2023 - ஞாயிற்றுக்கிழமை
நல்ல நேரம் :
காலை 7.30 மணி முதல் காலை 8.30 மணி வரை
மதியம் 3.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை
மாலை 4.30 மணி முதல் மாலை 6.00 மணி வரை
குளிகை :
மதியம் 3.00 மணி முதல் மாலை 4.30 மணி வரை
எமகண்டம் :
மதியம் 12.00 மணி முதல் மதியம் 1.30 மணி வரை
சூலம் - மேற்கு
மேஷம்
குழந்தைகளின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு மேம்படும். கலை சார்ந்த பணிகளில் ஈடுபாடு அதிகரிக்கும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அமையும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் உண்டாகும். கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். சாஸ்திரம் சார்ந்த பணிகளில் சிறு சிறு குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மதிப்பு நிறைந்த நாள்.
ரிஷபம்
மேல்நிலை கல்வியில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். வழக்கு தொடர்பான பணிகளில் சாதகமான முடிவு கிடைக்கும். சிக்கனமாக செயல்பட்டு சேமிப்பை மேம்படுத்துவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். கால்நடைகள் மீது ஆர்வம் உண்டாகும். எதிர்பாராத சில அலைச்சல்களின் மூலம் அனுபவம் மேம்படும். சுபகாரிய செயல்பாடுகளில் விவேகத்துடன் செயல்படவும். கடன்களை அடைப்பதற்கான எண்ணங்கள் மேம்படும். கீர்த்தி நிறைந்த நாள்.
மிதுனம்
பணிபுரியும் இடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் புதிய அனுபவம் உண்டாகும். விளையாட்டு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வதற்கான தருணங்கள் உண்டாகும். மனதில் புதுவிதமான சிந்தனைகள் ஏற்படும். அரசு சார்ந்த ஆவணங்களில் கவனம் வேண்டும். மறைமுக எதிர்ப்புகளை அறிந்து வெற்றி கொள்வீர்கள். விருப்பம் நிறைவேறும் நாள்.
கடகம்
உறவினர்களின் மத்தியில் உங்கள் மீதான நம்பிக்கை அதிகரிக்கும். புதுவிதமான ஆடைகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். தாயாரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பயணங்களின் மூலம் அனுகூலமான பலன்கள் கிடைக்கும். பொருளாதாரம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். மனதிற்கு பிடித்த உணவினை உண்டு மகிழ்வீர்கள். பேச்சுத்திறமையின் மூலம் இழுபறியான செயல்களை செய்து முடிப்பீர்கள். அமைதி வேண்டிய நாள்.
சிம்மம்
புதிய நபர்களிடம் விழிப்புணர்வுடன் செயல்படவும். மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். எதிலும் விடாப்பிடியாக செயல்படுவீர்கள். புதிய துறை சார்ந்த ஆர்வம் அதிகரிக்கும். எதிலும் முன்கோபமின்றி பொறுமையுடன் செயல்படவும். நினைத்த பணிகளை செய்து முடிப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். பயணங்களில் கவனத்துடன் இருக்கவும். உத்தியோக பணிகளில் பதற்றமின்றி செயல்படவும். கவனம் வேண்டிய நாள்.
கன்னி
குடும்ப உறுப்பினர்களிடத்தில் பொறுமை வேண்டும். எதிர்பாராத சில பயணங்கள் கைகூடும். அனாவசிய செலவுகளை தவிர்த்து கொள்வீர்கள். பழைய பாக்கிகள் கிடைப்பதில் அலைச்சல்கள் ஏற்படும். மற்றவர்கள் கூறும் கருத்துக்களால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பொருளாதார விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்வதை தவிர்க்கவும். சகோதரர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். விவேகம் வேண்டிய நாள்.
துலாம்
சிந்தனைகளில் தெளிவு பிறக்கும். சுபகாரியம் சார்ந்த எண்ணங்கள் பலிதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் ஆதரவான சூழல் ஏற்படும். மனதில் நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். சுற்றி இருப்பவர்களை பற்றிய புரிதல் மேம்படும். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நிலம் மற்றும் வீடு விற்பனையில் பொறுமையை கையாளவும். உழைப்புகள் நிறைந்த நாள்.
விருச்சிகம்
செயல்பாடுகளில் துரிதம் உண்டாகும். பழைய நினைவுகளின் மூலம் மாற்றமான சூழல் அமையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வியாபார பணிகளில் முன்னேற்றமான சிந்தனைகள் உண்டாகும். உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் கட்டுப்பாட்டுடன் செயல்படுவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். எண்ணிய சில பணிகள் நிறைவேறும். சுகம் நிறைந்த நாள்.
தனுசு
உத்தியோக பணிகளில் பதவி உயர்வுக்கான சிந்தனைகள் மேம்படும். உணவு சார்ந்த செயல்பாடுகளில் ஆர்வம் ஏற்படும். நண்பர்களின் வழியில் ஆதாயம் உண்டாகும். தொழிலில் சில பிரச்சனைகள் தோன்றி மறையும். மனதளவில் நேர்மறை சிந்தனைகள் மேம்படும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சமூக பணிகளில் பொறுப்புகள் கிடைக்கும். வெளிவட்டாரங்களில் மதிப்பு மேம்படும். உற்சாகம் நிறைந்த நாள்.
மகரம்
எதிலும் பொறுமையுடன் செயல்படுவதன் மூலம் மேன்மை ஏற்படும். உற்பத்தி தொடர்பான பணிகளில் கவனம் வேண்டும். இனம்புரியாத சிந்தனைகளால் ஒருவிதமான குழப்பம் ஏற்பட்டு நீங்கும். கற்பித்தல் பணிகளில் மாற்றமான சூழல் நிலவும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். உயர் அதிகாரிகளால் அலைச்சல்கள் ஏற்படும். விழிப்புணர்வு வேண்டிய நாள்.
கும்பம்
கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை அதிகரிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பணிபுரியும் இடத்தில் முயற்சிக்கு ஏற்ப பாராட்டுகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். சுபகாரிய பேச்சுவார்த்தைகள் கைகூடும். சகோதரர்களின் வழியில் ஆதரவு கிடைக்கும். மேன்மை நிறைந்த நாள்.
மீனம்
எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். நெருக்கமானவர்களுடன் தேவையற்ற விவாதங்களை தவிர்த்து கொள்வது நல்லது. உற்பத்தி சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். மறைமுக எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். செயல்பாடுகளில் மாற்றங்கள் ஏற்படும். அரசு தொடர்பான பணிகளில் ஆதாயம் உண்டாகும். நிறைவான நாள்.