கடந்த 2004 ஆம் ஆண்டு அப்பாஸ் மஸ்தான் இயக்கத்தில் அக்‌ஷய் குமார் , பிரியங்கா சோப்ரா , கரீனா கபூர் நடிப்பில் வெளியாகியிருந்த திரைப்படம்  ஐத்ராஸ் (Aitraaz) . இந்த திரைப்படத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பணத்திற்காக ஆசைப்படும் ஒரு பெண்ணாக , முன்னாள் காதலான அக்‌ஷய் குமாரை பழி வாங்க துடிக்கும் ஒரு பெண்ணாக நடித்திருந்தார். ஐத்ராஸ் படம் ஹாலிவுட் படமான டிஸ்க்ளோஷரை தழுவி எடுக்கப்பட்டிருந்தது. இந்த படத்தில் நடிப்பதற்கு பிரியங்கா சோப்ராவும் , அக்‌ஷய் குமாரும் முதலில் மறுப்பு தெரிவித்ததாகவும் , குறிப்பாக நடிகை பிரியங்கா சோப்ரா அழுததாகவும் இயக்குநர் சுனில் தர்ஷன் சில சுவாரஸ்யங்களை பகிர்ந்திருந்தார்.




அதில் “அக்‌ஷய் குமாருக்கு முதலில் நடிக்க விருப்பமில்லை. அவர்களை சம்மதிக்க வைக்க நான் களத்தில் இறங்கினேன். அக்‌ஷய் குமாருக்கு அப்போது நிறைய நிதி பிரச்சினைகள் இருந்தது. அவரிடம் நான் சொன்னேன் பணம் அதிகமோ குறைவோ , படத்தை நினைத்துப்பார் சிறப்பான படம் என்றேன். அதே போல பிரியங்கா சோப்ரா தனக்கு நெகட்டிவ் ரோல் கொடுத்துவிட்டதாக வருந்தினார். அவர் மிகவும் அப்செட்டாக இருந்தார். அழுதார். அன்றே வீட்டிற்கு சென்று உறங்கியும் விட்டார்.  நீ காலையில் எழுந்து மீண்டும் அலுவகத்திற்கு வா.. என்றேன். பிரியங்காவும் வந்தார்.. கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை அவர் மூளைக்கு ஏற்றினேன். அவரும் சம்மதித்தார். ஐத்ராஸ் (Aitraaz) திரைப்படம் பிரியங்கா சோப்ராவின் கெரியரில் மிக முக்கியமான திரைப்படம். ”என்றார்.






 


இந்த திரைப்படம் பிரியங்கா சோப்ராவிற்கு 50 வது ஃபிலிம் ஃபேர் விருதுகள் விழாவில் சிறந்த துணை நடிகை மற்றும் சிறந்த வில்லன் இரண்டுக்குமான விருதை பெற்றுத்தந்தது. பிந்நாட்களில் பிரியங்கா சோப்ராவே அந்த படம் தனது கெரியரில் மிகச்சிறந்த அனுபவமாக இருந்தது என்றார். பிரியங்கா தற்போது அமெரிக்க பாப் பாடகர் நிக் ஜோனஸை திருமணம் செய்துக்கொண்டு அமெரிக்காவில் செட்டில் ஆகிவிட்டார். அவ்வபோது பிரம்மாண்ட இயக்குநர்களின் இந்தி படங்களில் மட்டும் தலைக்காட்டி வருகிறார். பிரியங்கா - நிக் ஜோனஸ் தம்பதிகளுக்கு மால்தி மேரி என்னும் மகள் உள்ளார். இந்த மகளை இந்த ஆண்டு துவக்கத்தில்தான் வாடகை தாய் மூலம் தம்பதிகள் வரவேற்றனர். தற்போது பிரியங்கா தனது குழந்தையுடன் அதிக நேரத்தை செலவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார். அவ்வபோது குழந்தையுடன் எடுக்கும் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டாலும் குழந்தையில் முகத்தை பொது வெளியில் இன்னும் நடிகை பகிரவில்லை.