செய்தி வாசிப்பாளராக இருந்து பிரபலமான பிரியா பவானி ஷங்கர் இன்று இளம் கதாநாயகிகளில் ஒருவர். மீடியாவில் இருந்து சின்னத்திரைக்கு வந்த பிரியா, விஜய் டிவியின் கல்யாணம் முதல் காதல் வரை சீரியலில் நடித்தார். அதனைத் தொடர்ந்து அவருக்கு  ‘மேயாத மான்’ படத்தில் நடிகையாக நடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது.


அதன் பின்னர் கார்த்தியுடன் கடைக் குட்டி சிங்கம், எஸ்.ஜே சூர்யாவுடன் மான்ஸ்டர், அருண் விஜயுடன் மாஃபியா உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்தார். சமீபத்தில் ஓ மணப்பெண்ணே, பிளட் மணி உள்ளிட்ட அவர் நடித்த படங்களும் கவனிக்கப்பட்டன.






தற்போது பொம்மை, ஹாஸ்டல், ருத்ரன், யானை, பத்து தல, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்திருக்கிறார் பிரியா பவானி ஷங்கர். எப்போதும் சோஷியல் மீடியாவில் செம ஆக்டீவாக இருக்கும் பிரியா தற்போது கவிஞராகவும் மாறியுள்ளார். தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் இரண்டு புகைப்படங்களை பதிவிட்டுள்ள அவர், அதற்கு கேப்ஷனாக ஒரு கவிதையையும் எழுதியுள்ளார். அதில்,


மௌனம் பகிர்ந்து
கை விரல் பிடித்து
கதை பேசிய இரவு
விடியாமலே போயிருந்தால் தான் என்ன?


உனக்கு மட்டும் கேட்ட
என் மனம் இசைத்த பாடல்
மொழி தேடாமல்
உன்னோடு சேர்ந்து தூரம் போனது.
வரிகளற்ற என் பாடலை திருப்பிக்கொடு.
இம்முறை மௌனம் புரிய என்னிடம் ‘நாம்’ இல்லை
வார்த்தைகள் நிரப்பி நானே வைத்துக் கொள்கிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.






பிரியாவின் இந்த கவிதையை ஷேர் செய்யும் அவரது ரசிகர்கள் இந்த வரிகளைபாடலுக்கு பயன்படுத்தலாமே என்றும், நீங்கள் ஏன் பாட்டு எழுதக் கூடாது என்றும் பதிவிட்டு வருகின்றனர்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடிபில் வீடியோக்களை காண